இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மலேரியா நுளம்புகள் பரவும் சாத்தியம் உள்ளதாக தெரிவிப்பு!

மலேரியா நோய்க்கான காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவுவதற்கான அபாயமுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் எதிர்வு கூறியுள்ளார். 2016ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் அந்த நிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அண்மையில் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை நுளம்பு மீண்டும் இலங்கையில் மலேரியா நோய் பரவுவதற்கான அபாயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் […]

Continue Reading

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு!

தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வழியுறுத்தியுள்ளார். அதேவேளை இரு பிரதான கட்சிகளும் இணைந்து வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமது வேறுபாடுகளை களைந்து செயற்படுவது அவசியம் என்றும் கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியான புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. இதனை அவசியமில்லை என்பதாக […]

Continue Reading

யாழில் கைவிடப்பட்டது வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்!

வடக்கு மாகண வேலையற்ற பட்டதாரிகளினால் யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முடிவிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச துறைகளில் தமக்கு நிரந்தர நியமணம் வழங்கப்பட வேண்டும் என்பதனை கோரிக்கையாக முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் 143 நாட்களாக இரவு பகலாக நடாத்தப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் குறித்த இலக்கினை எட்டியதாக தெரியவில்லை. இந்நிலையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த காலப்பகுதியினுள் பல்வேறுபட்ட தரப்பினர் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். அதேவேளை வெற்வேறு […]

Continue Reading

போராட்டங்களுக்கு தீர்வு எப்போது?

நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவரப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்குக் கிழக்கு மக்கள் கேட்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக வடக்குக் கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. குறித்த போராட்டங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கமோ, மாகாண அரசாங்கமோ அக்கறைகொள்ளாத நிலையிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றன. முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று 70ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது. 41 மீனவக் குடும்பங்களும், 97 விவசாயக் குடும்பங்களும் தங்களின் சொந்த நிலங்களை […]

Continue Reading