20ஆவது திருத்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பு (பெப்ரல்) நேற்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான, விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதனை, அரசமைப்பின் 20ஆவது திருத்தமாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்திருந்த நிலையில், அதனைச் சவாலுக்குட்படுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 20ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரைக்கும் ஒத்திவைக்கப்படுவதற்கான இயலுமை. இந்த […]

Continue Reading

ஊழல் மோசடிகாரர்களை தேர்தல்களில் நிறுத்தக் கூடாது – கண்காணிப்பு அமைப்புகள் அறிவுறுத்து

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஊழல் மோசடிகளுடன் தொடர்பு கொண்டிராத மக்கள் பிரதிநிதிகளை முன்னிருத்தும் பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. பெண்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு நாட்டின் முன்னோடியான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமாக அமையும் எனவும் குறித்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Continue Reading

நீதிமன்றம் செல்லவுள்ளது பெப்ரல்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வரும் நிலையில், 20ஆவது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபைத் தேர்தல்களையும் பிற்போட முயற்சிக்கப்படுவதாக அறியமுடிகின்றது. இவ்வாறானதொரு முயற்சி முன்னெடுக்கப்படுமானால், அது தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பொன்றை மேற்கொள்ள வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, […]

Continue Reading

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றை நாடத் தீர்மானம்

மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். அனைத்து மாகாண சபைகளினது தேர்தலையும் ஒன்றாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பதவிக்காலம் நிறைவடையும் மாகாண சபைகளின் தேர்தலை நடாத்த முடியாமல் போகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இதனை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

திருத்தங்களுக்குத் தயாராகியது தேர்தல் பெயர் பதிவேடு

2017ஆம் ஆண்டு தேர்தல் பெயர் பதிவேட்டில் திருத்தப் பணிகளுக்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. முக்கியமான இரண்டு தேர்தல்கள் மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு என்பனவற்றை நாடு எதிர்கொள்ளவுள்ள நிலையில், இந்த சீர்திருத்த நடவடிக்கை தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக் கொள்வதாக பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் நிலையில் மீண்டும் திருத்தம் செய்வது கடினமாக இருக்கும் என்பதால் இந்த சந்தர்ப்பத்திலேயே இது தொடர்பில் அவதானம் […]

Continue Reading