பளை காடுகளில் ஆபத்தான வெடிபொருட்கள்

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காடுகளில் ஆபத்தான வெடி பொருட்கள் காணப்படுவதாக வனவள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது ஆளுகைக்குள் காணப்படுகின்ற காடுகளில் பரிசோதனைக்காக சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிபொருட்கள் இருப்பதை அவர்கள் அவதானித்துள்ளனர். வெடிக்காத நிலையில் காணப்படும் இந்த வெடிபொருட்களால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் எவ்வேளையிலும் ஆபத்து ஏற்படுத்தலாம் என்பதால், உரிய தரப்பினர் இவற்றை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும் எனவும் வனவள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக நிர்வாகக் கட்டிடம் திறந்துவைப்பு

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் இரண்டாவது நிர்வாகக் கட்டிடத்தினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் திறந்து வைத்துள்ளார். மக்களுக்கான சேவையினை தடையின்றி வழங்கும் முகமாக பிரதேச செயலகங்களின் வளங்களை விருத்தி செய்யும் முகமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் பிரதேச செயலகங்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பளை பிரதேச செயலகத்தில் மேற்படி 10 மில்லியன் ரூபா பெறுமதியில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணியின் தலைமையில் நேற்று […]

Continue Reading

பளை சம்பவம் தொடர்பில் கைதானவருக்கு பிணை

பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில், கொழும்புச் சிறப்புப் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி நேற்று மாலை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய பரந்தனைச் சேர்ந்த கிருபானந்தமூர்த்தி விஜயகணேசன் (வயது 32) என்பவரே இவ்வாறு கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த மே மாதம் 19ஆம் திகதி, அதிகாலை பளைப் பகுதியில் வைத்து பொலிஸ் சுற்றுக் காவல் அணியை நோக்கி ரி-56 துப்பாக்கியைப் […]

Continue Reading

பளை துப்பாக்கிச்சூடு – மேலுமொருவர் கைது

பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவர் என்பதுடன், இவரை அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர். கடந்த மாதம் பளை பகுதியில் பொலிஸாரின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன், அப்பகுதியில் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில் […]

Continue Reading

பளை துப்பாக்கிச்சூடு – விரிவான விசாரணை ஆரம்பம்

கிளிநொச்சி, பளை பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பளை, கச்சார்வெளி பகுதியில் பொலிஸ் ரோந்து சேவை வாகனமொன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது. குறித்த வாகனம் தினமும் இரவு வேளையில் இரணைமடு மற்றும் முகமாலை பகுதிகளுக்கு இடையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்றபோது வாகனத்தில் நான்கு பொலிஸார் இருந்தபோதிலும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், வாகனத்திற்கும் சேதம் ஏற்படவில்லையென […]

Continue Reading

பளையில் இராணுவம் குவிப்பு – மக்கள் மத்தியில் பதற்றம் (Photos)

பளை போக்குவரத்து பொலிஸாரின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு, பளை பகுதியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும்  இராணுவம் குவிப்பு மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகின்றது. பளை கச்சார் வெளி சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பளை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு போக்குவரத்துப் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரம் கச்சார் சந்திக் கிராம பக்கமாக சந்தேகத்திற்கிடமான சத்தம் கேட்ட போது போக்குவரத்து பொலிஸார் […]

Continue Reading