உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது சம்பந்தமான சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக குறித்த சட்டமூலத்திற்காக தினேஷ் குணவர்த்தன முன்வைத்த திருத்தங்கள் மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். இருந்த போதிலும், சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் […]

Continue Reading

20ஆவது திருத்தச் சட்டம் சபையில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், அமைச்சர் கயந்த கருணாதிலகவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை நாளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை, 225இலிருந்து 237ஆக அதிகரிக்கப்பதற்கு அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் 12ஆம் திகதி அனுமதியளித்திருந்தது. அத்துடன், இந்த சட்டமூலத்துக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 145 பேர் விகிதாசார பிரதிநிதித்துவமுறையிலும் 55 உறுப்பினர்கள் தொகுதிவாரி முறைமையிலும் தெரிவு செய்யப்படுவர்.

Continue Reading

குறைநிரப்புப் பிரேரணை நாடாளுமன்றில் முன்வைப்பு

6 வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான 53 பில்லியன் குறைநிரப்பு பிரேரணை நேற்று உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருந்தெருக்கள் அமைக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

Continue Reading

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை தொடர்பில் நாடாளுமன்றில் பிரேரணை

மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசாங்கம் கையேற்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் வரைபுத்திட்டமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அதற்கான பிரேரணையை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை அரசாங்கத்தினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டு, அதன் நிர்வாகம் முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கிடையே மருத்துவப் பட்டப்படிப்பு தொடர்பான தரம் மற்றும் விதிமுறைகள் தொடர்பான சட்டமூலம் ஒன்றும் விரைவில் நாடாளுமன்றத்தில் […]

Continue Reading

கலப்புமுறை தேர்தலுக்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில்

கலப்பு முறையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மஹிந்த அணியினர் தீர்மானித்துள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளதுடன், இது குறித்து நேற்றையதினம் மஹிந்த அணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது, குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்து அதனை நிறைவேற்றுவதன் ஊடாக, அரசாங்கத்தை உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் வகையில் உந்துவதற்கு […]

Continue Reading

ஒத்திவைக்கப்பட்டது சபை நடவடிக்கைகள்

பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பெற்றோலியவள ஊழியர்கள் மேற்கொண்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விஷேட உரையாற்றிய போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன பல்வேறு கேள்விகளை எழுப்பியதால், ஏற்பட்ட அமளிதுமளி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு.ஜெயசூரிய பாராளுமன்றத்தை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளார்.

Continue Reading

காணாமற்போனோர் சட்டம் திருத்தத்துடன் சமர்ப்பிக்கப்படும்

பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்ட சகலரையும் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், பணிகளை நிறைவேற்றுதலும் சட்டமூலத்தை, திருத்தத்துடன் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பித்து, நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும், அந்தச் சட்டமூலத்தை பிறிதொரு தினத்தில் சமர்ப்பிப்பதாகவும் […]

Continue Reading

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக விவகாரம் ; 21ஆம் திகதி விவாதம்

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும், காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகத்தை உருவாக்க அரசாங்கம் இணக்கம் கண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

காணாமற் போனவர்கள் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

யுத்தகாலப் பகுதியிலும் அதன் பின்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் குறித்த சட்டமூலம் எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின்போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிரகாரம் கடந்த 2016ஆம் ஆண்டு இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜே.வி.பியினால் இந்த அலுவலகத்துக்கு ஒப்பந்தம் செய்யும் அதிகாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தம் கடந்த மார்ச் மாதம் அமைச்சரவையில் ஏற்றுக் […]

Continue Reading

நீர்ப்பாசனக் கொள்கை தொடர்பில் விரைவில் முன்மொழிவு

புதிய நீர்ப்பாசனக் கொள்கை தொடர்பில் அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்திலும் வெகுவிரைவில் முன்மொழிவொன்று முன்வைக்கப்படுமென நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். நீர்ப்பாசன திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இந்தப் புதியக் கொள்கை, நீர்ப்பாசனக் கொள்கைகளை மேலும் வலுவடையச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். நீர்ப்பாசனத்தையும் ஏரிகளையும் பாதுகாப்பதற்கு தற்போது சட்டங்கள் ஏதும் இல்லாமல் உள்ளது என்றும் எனவே, இதற்கான தீர்வை கொண்டுவரும் பொருட்டே, புதியக் கொள்கை கொண்டுவரப்படும் […]

Continue Reading

சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமளிதுமளியால் சபை நடவடிக்கைகள் நாளை (07) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று நடைபெறவிருந்தது. இன்றைய சபை நடவடிக்கைகள் ஆரம்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கருத்துக்களைத் தெரிவிக்கும் போது, இந்த விவாதத்திற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் தொடர்பில் திருப்தியடைய முடியாதென தெரிவித்தார். எவ்வாறாயினும், எதிர்க்கட்சி வரிசையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தனியொரு பிரிவாக அங்கீகரிக்கப்படாததால் […]

Continue Reading