யாழpல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும்  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாகவே தமது கண்டனத்தினை தெரிவித்துள்ளார். “நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு நான் கண்டனம் தெரிவிக்கின்றேன்”. ஜனாதிபதி, துணிச்சலான எமது பொலிஸ் அதிகாரிகளின் தியாகம் மறக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.  

Continue Reading

சிகிச்சைக்காக அணுமதிக்கப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலர் உயிரிழப்பு!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார். நல்லூரில் நேற்று (22.07.2017) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறித்த மெய்ப்பாதுகாவலர் படுகாயமடைந்தார். இந்நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்ட அவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

Continue Reading

பொலிசாருக்கு எதிராக முறைப்பாடு

பொலிஸ் அதிகாரிக்கும் சக பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்குமிடையில் பணி நிமித்தம் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்விளைவாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மதுபானம் அருந்துவதற்காக இருவரும் அங்கு சென்றுள்ளனர். அவ்வாறு சென்றிருந்த இருவரும் தற்செயலாக சந்தித்த போது, அவர்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றியதால், பொலிஸ் பரிசோதரை பொலிஸ் கான்ஸ்டபிள் […]

Continue Reading

யாழ். பொலிசார் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் நகை கொள்ளை விடயத்தில் தொடர்புபட்டிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லையென யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். அவ்வாறு பொலிஸ் அதிகாரிகள் எவருக்கும் எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்படவில்லையென ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நகை கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தளங்களிலும் சில உள்ளுர் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் […]

Continue Reading