யாழில் பொலிஸார் மீது துரத்தித்துரத்தி வாள் வெட்டு!

வாள்வெட்டிற்கு இலக்கான இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் இன்று (30) பிற்பகலுக்கு பிற்பாடு கொக்குவில், பொற்பதி பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸார் என தெரிவிக்கப்படுகிறது. 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தி துரத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வாள்வெட்டில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பு தெரிவிக்கிறது.

Continue Reading

நல்லூர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பொலிஸ் மா அதிபர் அஞ்சலி!

யாழ். நல்லூர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அஞ்சலி செலுத்தியுள்ளார். சிலாபம் குமாரகட்டுவில் உள்ள பொலிஸ் அதிகாரியின் இல்லத்திற்கு நேரில் சென்று இந்த அஞ்சலியினை அவர் செலுத்தியுள்ளார். இதன்போது அவரது குடும்பத்தாருக்கு பொலிஸ் திணைக்களம் சார்பிலான தமது அணுதாபங்களையும் தெரிவித்துள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குறித்த மெய்ப்பாதுகாவலரின் உடலுக்கு நாட்டிலுள்ள பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றைய தினம் […]

Continue Reading

யாழ். நல்லூர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் இறுதிக் கிரியைகள் இன்று

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் இன்று (26) இடம்பெறவுள்ளன. இறுதிக் கிரியைகள்அ வரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து தற்போது உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் ஹேமசந்திரவின் பூதவுடலுக்கு நாட்டிலுள்ள பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நீதிபதி இளஞ்செழியனின் நீண்ட கால பாதுகாப்பு உத்தியோகத்தரான சரத் ஹேமசந்திரஇ யாழ். நல்லூர் வீதியில் கடந்த […]

Continue Reading

நல்லூர் தாக்குதலுக்கு வவுனியா மன்னாரில் கண்டணம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சிக்கு வவுனியா மன்றும் மன்னாரில் கண்டன பேரணி இடம்பெற்றள்ளது. பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (25.07.2017) வவுனியாவில் அமைதிப் பேரணி ஒன்று நடைபெற்றது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனை சந்தையின் முன்பாக ஆரம்பமான கண்டனப் பேரணி பஸார் வீதி வழியாக வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியை வந்தடைந்துஇ பின்பு அங்கிருந்து […]

Continue Reading

“மச்சான் சவால் விட்டான் நான் சுட்டேன்” என சந்தேக நபர் வாக்கு மூலம்!

முடிந்தால் சுடுமாறு மச்சான் சவால் விட்டான் நான் சுட்டேன் என்று யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருக்கும் நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரணமான பிரதான சந்தேக நபர் தெரிவித்துள்ளார். நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் உந்தப் பொலிஸை உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார். அதனாலேயே தாம் சுட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் சந்தேக நபர் தெரிவித்துள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக […]

Continue Reading

கரடியனாறு பொலிஸ் பிரிவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் பலி!

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமார வேலியார் கிராமம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்து உயிரிழந்துள்தாளார். மணல் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் சென்று எச்சரிக்கை விடுத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர். இதன் போது இரு இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்துள்ளனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொம்மாதுறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கரடியனாறு […]

Continue Reading

யாழில். இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நல்லூர்ப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்றள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சார்ஜன் உட்பட இருவர் காயம். அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே குறித்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் சந்தேஅகிக்கப்படும் பிஸ்டல் நல்லூர் கோவிலுக்க அருகாமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு சென்றிருக்கும் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டு […]

Continue Reading

இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றுவிப்பவர்களுக்கு கடும் தண்டனை

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்துவதற்கு முயல்பவர்களுக்கு எதிராக எவ்விதமான பாராபட்சமும் அந்தஸ்துமின்றி கடுமையான முறையில் சட்டம் அமுல்ப்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பியந்த ஜயக்கொடியின் கையொப்பத்தில், பொலிஸ் தலைமையகம் நேற்று விடுத்திருந்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தங்களுடைய பொலிஸ் பிரிவுக்குள் இவ்வாறான முரண்பாடுகள் அல்லது அனர்த்தங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் இடம்பெறுமாயின், அதற்கான முழுப் பொறுப்பையும் சகல பொலிஸ் நிலையங்களின் […]

Continue Reading

திருமணம் முடித்தமையால் பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிசாருக்கு அழைப்பு

தொண்டர் பொலிஸ் அதிகாரிகளாக இருந்த காலத்தில் திருமணம் முடித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட 149 பேரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இலங்கை பொலிஸ் சேவையில் தொண்டர் அதிகாரிகளாக இணைந்து கொள்பவர்கள் மூன்று வருடங்களுக்கு திருமணம் முடிக்க அனுமதி இல்லையெனத் தெரிவிக்கப்படும் நிலையில், இவ்வாறு திருமணம் முடித்தமையால் பணி நீக்கம் செய்யப்பட்ட 149 பேரை மீளவும் சேவையில் இணைத்துக்கொள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Continue Reading

பொலிஸ் சீருடையில் மாற்றம்

பொலிஸ் சீருடை வர்ணத்தில் மாற்றம் செய்வதற்கு இனிவரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பண்டாரவளை, எல்ல பொலிஸ் பிரிவில் இடம்டபெற்ற நிகழ்வில் கருத:துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், உலகில் பல நாடுகளில் சர்வதேச ரீதியில் பொலிஸ் சீடையின் வர்ணமாக நீல நிறம் பயன்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading