ஒக்டோபரில் விவசாய வாரம்

ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தை தேசிய விவசாய வாரமாக பிரகடனப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கரடியனாறு விவசாய சேவைகள் பயிற்சி நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதுடன், ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தை தேசிய விவசாயிகள் வாரமாக பிரகடனப்படுத்துவதுடன், முழு நாடும் ஒன்றிணைந்த விரிவான விவசாய நிகழ்ச்சித்திட்டத்தை அவ்வாரத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களது பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் முக்கியத்துவமளித்திருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால […]

Continue Reading

வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு

2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017ஆம் ஆண்டில் வெளிநாட்டு முதலீடுகள் நூற்றுக்கு 300 வீதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 1,000 ஏக்கர் அளவிலான தொழிற்துறை வலயத்தை ஏற்படுத்த தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் எல்.என்.ஜி மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

தற்போதைய அரசை அசைக்க முடியாது – ஜனாதிபதி

தற்போதைய கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சூழ்ச்சிகளால் எதையும் சாதிக்க முடியாது. எவர் இருந்தாலும், எவர் போனாலும் எங்களது ஆட்சி தொடரும், எவர் தவறு செய்தாலும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள், அது எந்தக் கட்சியினராக இருப்பினும் பரவாயில்லை என்றும் அச்சு, இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போது தெரிவித்துள்ளார். மோசமான நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் கூட்டு அரசாங்கமே மீட்டதாகவும், நாடு முகம்கொடுத்திருந்த பல்வேறு சவால்களை வெற்றி […]

Continue Reading

கூட்டு அரசாங்கத்தில் தொடர்வது குறித்து டிசெம்பரில் முடிவு

இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையிலான உடன்படிக்கை காலம் முடிவடைந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் பங்காளியாக தொடர்ந்தும் இருக்குமா இல்லையா என்று தீர்மானிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் செயற்படுவதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதாகவும், இதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூடி தீர்மானத்தை […]

Continue Reading

சிறந்த சமூக நடைமுறைகளைப் பெற்றுக்கொள்ள செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

பழங்காலத்து பெருமைகளை பாடிக்கொண்டிருக்காது அக்காலத்தில் இருந்த சிறந்த சமூக நடைமுறைகளை பெற்றுக்கொள்வதற்காக செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதுடன், பழங்காலத்து சமூகத்தின் உயரிய சமூக நெறிமுறைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் பிற்காலத்து சமூகத்திற்காக கடத்திச்சென்றுள்ள போதிலும், அவைதொடர்பில் தற்போது பெருமைகள் பேசப்படுகின்றதே தவிர, அதனை பின்பற்றும் சமூக நோக்கு ஒருவருக்கும் இல்லை என்பதால், பழமையின் பெருமைகளை தற்கால […]

Continue Reading

முழு நாட்டையும் ஒரே சீராகக் கட்டியெழுப்புவதே நோக்கம் – ஜனாதிபதி

09 மாகாணங்களிலும் பல்வேறு நடைமுறைகள் உள்ள நிலையில், முழு நாட்டையும் சமமான முறையில் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் கொள்கையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக அபிவிருத்தியில் பின்தங்கிய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிப்பெற செய்ய தேவையான ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Continue Reading

விஜயதாஸ ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதியின் பதில்

விஜயதாஸ ராஜபக்ஷ, அமைச்சரவையில் வகிக்கும் அமைச்சுப் பதவி உள்ளிட்ட அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தினால் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு […]

Continue Reading

குப்பை அகற்றல் முகாமைத்துவத்தை விரைவில் நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு

சரியான குப்பைகூழ முகாமைத்துவ நடவடிக்கைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக 09 மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு குப்பைக்கூளங்கள் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கும் அரசாங்கத்தின் கொள்கை வகுப்பின் ஒருகட்டமாக, இந்த நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற 09 மாகாணங்களின் குப்பைக்கூழங்களது முகாமை தொடர்பான கலந்துரைடயாலின் போது அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

வருட இறுதிக்குள் கழிவு முகாமைத்துவத்திற்குரிய நடவடிக்கை பூர்த்தியாக வேண்டும் – ஜனாதிபதி

இவ்வருட இறுதிக்குள் 09 மாகாணங்களிலும் கழிவு முகாமைத்துவத்திற்கான உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி நிறைவு செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை முறைமைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள கழிவுகளை அகற்றுதல் தொடர்பான பிரச்சினைக்கு அடுத்த வருடத்தில் நிலையான தீர்வொன்றினை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் அதனையண்டிய பிரதேசங்களில் மாசடைந்துள்ள […]

Continue Reading

அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபையின் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பேரவை மாநாடு செப்டெம்பர் 12ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி செப்டெம்பர் 19ஆம் திகதி ஜனாதிபதி குறித்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் அவர் கலந்துகொள்ளும் 03 பேரவை அமர்வு இது என்பதுடன், குறித்த விஜயத்தின் போது, ஜனாதிபதி சில முக்கிய அரச […]

Continue Reading

போதைப்பொருட்கள் தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழு

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சுற்றிவளைப்புக்களில் இதுவரை காலம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுக்கு என்ன நடந்ததென உடனடியாக கண்டறிந்து ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்காக அமைச்சரவையின் உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் உறுப்பினர்களாக சாகல ரத்நாயக்க, விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று அமைச்சரவை கூடிய நிலையில், அண்மையில் பல்வேறு சுற்றிவளைப்புக்களில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுக்கு […]

Continue Reading

அதி நவீன போர்க்கப்பல் விரைவில் ஜனாதிபதியால் கையளிப்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதி நவீன போர்க்கப்பலை  எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளது. இலங்கை கடற்படையில் 67 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை கடற்படையின் முதலாவதாக கொள்வனவு செய்யப்பட்ட யுத்தக் கப்பலாகும். இதேபோன்று இந்தியாவில் வெளிநாட்டு கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட பாரிய யுத்த கப்பலாகவும் இது அமைந்துள்ளது. கடற்படையினரின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் கோவா கப்பல் தயாரிப்புப் பிரிவில் இந்த ஆழ்கடல் கண்காணிப்புக்கான கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்தை […]

Continue Reading