இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

துறைசார் மற்றும் புத்திஜீவிகள் பெண்களுக்கான அமைப்பு, மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மகஜர் ஒன்றை கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் கையளித்துள்ளது. மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சு, பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஒப்புதல் வழங்குகின்றதா என்ற கேள்வியுடன் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் தாம் அதிகம் கரிசனை கொள்வதாகவும் அந்த அமைப்பு கையளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கான பால் சமநிலைத்துவம் […]

Continue Reading

காணி அபகரிப்பைத் தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துவதுடன் அபகரிக்கப்பட்ட தமது காணிகளை மீட்டுத்தருமாறுகோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய பொதுமக்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது காணியை மீட்டுத்தருமாறு கோசங்களை எழுப்பியதுடன், தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும், அதனை தடுப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் யாரும் இதுவரையில் முன்வரவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர். கல்குடா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் […]

Continue Reading

பொருத்து வீட்டை வழங்கக் கோரி கிழக்கில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் இன்று, 30 வருட யுத்தத்தினால் வீடுகளை இழந்த கிழக்கு மாகாண மக்கள் தமக்கும் இந்திய அரசின் உதவி திட்ட அடிப்படையில் அமைத்துக் கொடுக்கப்படும் பொருத்து வீடுகளை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது, 12.00 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஓன்றை கையளித்ததுடன் நிறைவடைந்தது. இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் யுத்தத்தினால் வீடுகளை […]

Continue Reading

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து வடக்கில் பணிப்புறக்கணிப்பு (Video)

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் வடமாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து வடமாகாண தனியார் பேரூந்துகள் இன்று (24) திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமை போன்று உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இன்று பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகள் […]

Continue Reading

சட்டத்தரணிகள் சங்கத்தால் நாளை எதிர்ப்புப் பேரணி

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் முயற்சிக்கு அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்து நாளை எதிர்ப்பு பேரணியில் ஈடுபடவுள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்த நாம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியதுடன், இதனை மிகவன்மையாகக் கண்டிக்கின்றோம். இலங்கையின் நீதிபதி ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலைமை என்பது தற்காலத்தை அளவிடக் கூடிய […]

Continue Reading

கிளிநொச்சியிலும் சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லையென வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி சுகாதார தொண்டர்களும் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி சுகாதாரத் தொண்டர்கள் ஆகிய நாம் நாளைய தினம் (இன்று) வடமாகாண ஆளுனரை சந்திக்கவுள்ளதாகவும், அவர் தமக்கு சுமூகமான பதிலை வழங்காத பட்சத்தில் தமது கவனயீர்ப்புப் போராட்டம் தீர்வு கிடைக்கும் அவரை தொடரும் என்று தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

யாழ். – மன்னார் பிரதான வீதியில் மக்கள் போராட்டம்

கிளிநொச்சி, இரணைத்தீவு மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது பூர்வீகக் காணியில் தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி கடந்த 54 நாட்களாக இரணைத்தீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், நேற்று காலை யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பகுதிக்கு வருகைதந்த பொலிஸார் மக்களுடன் கலந்துரையாடியதை அடுத்து, வீதியின் ஒருபுறமாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க மக்கள் இணங்கினர். பூநகரி பிரதேச செயலாளர் வருகைதரும் வரை தமது ஆர்ப்பாட்டத்தைக் கைவிடப் போவதில்லையென மக்கள் தெரிவித்ததால், அவர் […]

Continue Reading