மாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி

மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்காக திருத்தப்பட்ட மாகாண சபை தேர்தல் சட்டமூலத்தை வர்த்தமானியில் அறிவிக்கவும், அதனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Continue Reading

வடமத்திய மாகாண சபையில் பதற்றம்! தலைவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை

வடமத்திய மாகாண சபையில் இன்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சபையின் தலைவருக்கு எதிராக இன்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. மாகாண சபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையினை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு சபைத் தலைவர் பி.எம்.ஆர். சிறிபால அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் சபைத் தலைவர் சபை நடவடிக்கைகளை எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து வெளியேறியுள்ளார். இதனை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் […]

Continue Reading

இவ்வருடம் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள மாகாண சபைகள்

கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல், இவ்வாண்டில் நடத்தப்படுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர்களின் மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட சட்டத்துக்கு ஏற்ப, இவை நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்படும் அதேவேளை, இவ்விடயம் தொடர்பில் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய கருத்துத் தெரிவிக்கையில், இந்த 03 மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் இவ்வாண்டில் நடத்தப்பட வேண்டியிருப்பதாகவும், அவை பிற்போடப்படாது எனவும் தெரிவித்துள்ளார். இன்னும் சில மாகாண சபைகளும் கலைக்கப்பட்டு, அந்த 03 சபைகளுடனும் தேர்தல் நடத்தப்படுமா எனக் […]

Continue Reading