நல்லூர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பொலிஸ் மா அதிபர் அஞ்சலி!

யாழ். நல்லூர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அஞ்சலி செலுத்தியுள்ளார். சிலாபம் குமாரகட்டுவில் உள்ள பொலிஸ் அதிகாரியின் இல்லத்திற்கு நேரில் சென்று இந்த அஞ்சலியினை அவர் செலுத்தியுள்ளார். இதன்போது அவரது குடும்பத்தாருக்கு பொலிஸ் திணைக்களம் சார்பிலான தமது அணுதாபங்களையும் தெரிவித்துள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குறித்த மெய்ப்பாதுகாவலரின் உடலுக்கு நாட்டிலுள்ள பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றைய தினம் […]

Continue Reading

மீண்டும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை – பொலிஸ் மா அதிபர்

பயங்கரவாதத்துக்குள் நாட்டை மீண்டும் உட்படுத்துவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப் போவதில்லையென, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இதேவேளை, வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள், பயங்கரவாதச் செயற்பாடுகள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்வோர் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக, பொதுமக்களின் நலன்கருதி மேற்கொள்ளக்கூடிய அனைத்து உடனடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதில் தாம் உறுதியாகவே நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். […]

Continue Reading