கட்டார் விமானப் பயணிகள் இன்னும் செல்லவில்லை

அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இருந்த பயணிகளில் சிலர் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், சுமார் 150 பயணிகள் இன்னும் நாட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலிருந்து கட்டாரிற்கு பயணித்த கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 787 ரக விமானம் நேற்றிரவு 8.28 மணியளவில் விமானத்தில் ஏற்பட்ட புகை காரணமாக அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்படும் போது 208 பயணிகளும், […]

Continue Reading

அவசரமாக தரையிறங்கிய கட்டார் விமானம்

தாய்லாந்திலிருந்து கட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட புகை காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 ரக விமானமே தரையிறக்கப்பட்டதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் 208 பயணிகளும், 15 ஊழியர்களும் இருந்துள்ள நிலையில், பயணிகள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Continue Reading