ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்படமாட்டாது – இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்

எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்படுகின்ற போது எந்த காரணம் கொண்டும் ஆசிரியர் உதவியாளர்கள் என்ற ஒரு பதவிக்காக நியமனம் வழங்கப்படமாட்டாதென கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டங்களை அண்மித்த தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்கள் 113 பேருக்கான நியமனங்கள் இன்று கல்வி அமைச்சில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர். ஆசிரியர் நியமனங்கள் வழங்கி […]

Continue Reading

விண்ணப்பத் திகதி நீடிப்பு

முதலாம் தரத்திற்கு பாடசாலை மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் தொடர்பான திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2018ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி தினமாக 30.06.2017 குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது தபால் திணைக்கள ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பெற்றோர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்ற நிலையில், இது தொடர்பாக பெற்றோர்கள் கல்வி இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். […]

Continue Reading

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ.எஸ்.இராதாகிருஸ்ணன் இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி அமைச்சு ஊடாக பாடசாலைகளுக்கான 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டிருந்த நிலையில், தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டதுடன், விண்ணப்பிக்கும் இறுதி திகதியாக இன்று […]

Continue Reading

புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் மாற்றம் வேண்டும் – இராதாகிருஷ்ணன்

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் இலங்கையர் மத்தியில் நிலவும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்கின்ற சபேஷன் வேலாயுதத்தின் நிதியில் இருந்து 12 லட்சம் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள், 1200 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போது இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், புலம்பெயர்ந்த அமைப்புகள் என்றால் வித்தியாசமாக பார்க்கப்படுகின்ற நிலைமை தற்போது உள்ளது. தமிழ், சிங்கள, வித்தியாசமின்றி புலம்பெயர்ந்தவர்கள் உதவியளிக்க தயாராக இருக்கிறார்கள் என்றும் […]

Continue Reading

இந்திய ஆசிரியர்களுக்கு எதிர்ப்பு

மலையகத்தில் நிலவும் உயர்தர வகுப்புகளுக்கான விஞ்ஞான மற்றும் கணித பிரிவு ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு தமிழகத்தில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவர இலங்கை ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. மலையக ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மற்றும் […]

Continue Reading

இந்தியாவிலிருந்து ஆசிரியர்களைக் கொண்டுவர நடவடிக்கை

மலையகத்தில் கணித, விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவதற்கு தற்பொழுது இந்திய தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் திருமதி. சபாரஞ்சனி தலைமையில் மீபேயில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற பெருந்தோட்ட பாடசாலைகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். தற்பொழுது மலையகத்தில் 25 கணித விஞ்ஞான […]

Continue Reading