சுகாதார அமைச்சருக்கு எதிராக வழக்கு

சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு எதிராக பொதுச் சொத்துகள் சட்டமூலத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டுமென அரச மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் தன்னிச்சையான முடிவுகளை எடுத்துக்கொண்டு பொது மக்களையும், பிரதமரையும், ஜனாதிபதியையும் திசைதிருப்பிக் கொண்டிருக்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு எதிராக பொதுச் சொத்துகள் சட்டமூலத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை […]

Continue Reading

தனியார் வைத்தியசாலைகள், ஆய்வுகூடங்களை சோதனையிட அமைச்சர் ராஜித உத்தரவு

மருத்துவப் பரிசோதனைகளுக்காக, சுகாதார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட அதிகமான கட்டணங்களை அறவிடும் தனியார் வைத்தியசாலைகள், ஆய்வுகூடங்கள் போன்றவற்றில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, தனியார் சுகாதார சேவைகள் அபிவிருத்திகளுக்கான பணிப்பாளர் காந்த்தி ஆரியரட்ணவுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார். ஜூன் மாதம் 19ஆம் திகதி அமுலுக்குவரும் வகையில், சாதாரண இரத்தப் பரிசோதனையொன்றுக்கு, 250 ரூபாயும் டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகரிக்கப்படும் நோயாளிக்கு மேற்கொள்ளப்படும் இரத்தப் பரிசோதனைக்கு, 1,000 ரூபாயும் அறவிடப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு […]

Continue Reading

இலங்கையின் சுகாதார சேவை மிகச் சிறந்தது – அமைச்சர் ராஜித

இலங்கை போல் இலவச சுகாதார சேவைகளை வழங்கும் பிற நாடுகள் இருப்பின் கூறுமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும், மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பயன்படுத்தி சுகாதார சேவையை தனியார் மயப்படுத்த தீர்மானித்துள்ளதாக, சிலர் குற்றம்சாட்டுவதாக கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்துள்ளார். அத்துடன், அரசின் வேலைத் திட்டங்களை குழப்ப சிலர் முற்பட்ட போதும், இந்த சவாலை சமாளித்து அரசாங்கம் முன்னோக்கி செல்லும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராய வேண்டும்

யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளின் ஊடாகவே உண்மை வெளிப்படுமென அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.   அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் அறிந்துகொண்ட தகவல்களுக்கமைய, அது திட்டமிடப்பட்டதொன்றல்ல எனத் தெரிவித்துள்ளார்.   இதேவேளை, சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளின் முடிவுகள் குறித்து […]

Continue Reading

வீழ்ச்சி கண்டது சிகரெட் பாவனை

நாட்டில் சிகரெட் பாவனை நூற்றுக்கு 46 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிகரெட்டுக்களின் விலையை அதிகரித்தமையே இதற்குக் காரணம் எனவும் கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை!

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் நேற்று (19.07.217) இதனை வெளிப்படுத்தினார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விக்கு அமைச்சர் இதன் போது பதிலளித்தார். காணாமற்போனோர் விடயம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழ் மக்களின் காணி உரிமை போன்ற பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. அடிப்படை விடயங்கள் தொடர்பான முடிவுகள் இல்லாத நிலையில் அனைத்தும் […]

Continue Reading

டெங்கு நோயாளர்களை அறிக்கையிட குழு நியமனம்

டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் அன்றாடம் அறிக்கை இடுவதற்குச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார். நாடளாவிய ரீதியிலுள்ள சகல வைத்தியசாலைகளிலிருந்தும் தகவல்களைத் திரட்டி, நாளாந்தம் தயாரிக்கப்படும் அறிக்கை, சுகாதார அமைச்சுக்கு ஒப்படைக்கப்படும். இந்தக் குழுவில், குழந்தை நல மருத்துவ நிபுணர் வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ, உடல்நோய்கள் தொடர்பான விஷேட நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, டெங்கு ஒழிப்புப் […]

Continue Reading

தனியார் வைத்தியசாலை கட்டணங்கள் ஒழுங்குபடுத்தப்படவுள்ளன – அமைச்சர் ராஜித

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக தங்கும், பரிசோதனை ஆகியவற்றிற்கான கட்டணங்களை ஒழுங்குபடுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரத்தின்படி அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். முழு இரத்தக் கொள்ளளவு பரிசோதனைக்கு 800-900 ரூபா வரை அறவிடுவதாகவும், அதனை 250 ரூபா வரை குறைக்க முடியும் என்றும் […]

Continue Reading

அனர்த்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் நிதியுதவி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு இலட்சத்து 50,000 அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் உறுதியளித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இத்தேபான, கல்பான, இரத்தினபுரி, தெனியாய மொரவக்க மற்றும் கம்புறுபிட்டிய ஆகிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு இருக்கின்ற நோயாளர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான அளவு வைத்தியர்கள் […]

Continue Reading