தேர்தலுக்கு தயாராகிறார் பிரதமர்

20,000 அபிவிருத்தி உதவியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சிற்காக இவ்வாறு 20,000 அபிவிருத்தி உதவியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும், புதிய அதிகாரிகள் பல்வேறு துறைகளுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்டிருந்த கடன் தொகைகள் இரண்டு ஆண்டுகளில் பாரியளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த அரசாங்கத்தின் பயணம் மெதுவானது என்ற போதிலும் நிதானமானதெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading

ஐந்து வருடத்தில் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது – பிரதமர்

ஐந்து வருடங்களில் நாட்டின் பிரச்சினைகளை முழுமையாக தீர்த்துவிட முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், நாடு குறித்த எதிர்கால திட்டமிடலும் ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியம் என்றும், அவ்வாறு இல்லையேல் நாட்டை அபிவிருத்தி பாதைக்குக் கொண்டுச் செல்ல முடியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

சிறந்த முன்னுதாரணம் – ரணில் பாராட்டு

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தமையானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய யுகத்துக்கான எடுத்துக்காட்டென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், கடந்த ஆட்சியின் போது குற்றச்சாட்டுகள் இருந்த யாரும், இவ்வாறு செய்ய முன்வந்திருக்கவில்லை. இராஜினாமாச் செய்யுமாறு வலியுறுத்திய எங்களையே தூசித்தனரென அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்வதாக ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில் நேற்று (10) உத்தியோகபூர்வமாக அறிவித்து அறிக்கை விடுத்ததன் பின்னர் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். […]

Continue Reading

களவு, கொள்ளைகளுக்கு இடமில்லை – பிரதமர் ரணில்

ஆளும் அரசாங்கம் களவுகளை ஒருபோதும் அனுமதிக்காதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பேவலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போNது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், முன்னாள் அரசாங்கத்தால் 320 கோடி ரூபா செலவு செய்யப்பட்டு சூரியவெவ மைதானம் அமைக்கப்பட்ட போதிலும், அங்கு தற்போது காட்டு யானைகள் தொல்லையாக உள்ளதாகவும் அதுபோல் 150 கோடி ரூபா செலவு செய்து ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்பட்ட போதிலும், அதனால் உரிய பலன் கிடைக்கவில்லை. இந்தநிலையில் தற்போது அது சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு […]

Continue Reading

நல்லாட்சியை வழங்கவே ஜனாதிபதியை பொதுவேட்பாளராக நிறுத்தினோம் – பிரதமர்

நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை ஒரு பொது வேட்பாளராக நிறுத்தி, நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது, மக்களின் எதிர்பார்ப்புகளை நடைமுறைப்படுத்திக் கொள்வதற்கேயென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இந்த நாட்டில் நிலவி வந்த சுதந்திரமற்ற நிலை தற்பொழுது இல்லை எனவும், மக்கள் சுதந்திரமாகவே செயற்படுவதாக சுட்டிக்காட்டியதுடன், இதனை உருவாக்கியது நல்லாட்சி அரசாங்கமே எனவும் ஹற்றனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், […]

Continue Reading

காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க பொருளாதார கட்டமைப்பு தயார்

உலகில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கு ஏற்றவகையில், பொருளாதாரக் கட்டமைப்பு இலங்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கான தண்ணீர் பௌசர்களை பெற்றுக்கொடுக்கும் விஷேட வேலைத்திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (18) அலரிமாளிகையில் வைத்து ஆரம்பித்து வைத்த பின்னர் அங்கு கருத்துத் தெரிவிக்கும் போது, உலகில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியானது, இன்னும் சில மாதங்களில் இலங்கையிலும் ஏற்படக் கூடுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

அனர்த்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மாடி வீடு – பிரதமர்

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பத்துக்கு அமைவாக, உயர்மட்ட மாடிவீட்டுத் திட்டமொன்றை பரீட்சார்த்தமாக மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தங்களுக்குள்ளான பிரதேசங்களை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான விடயங்களைக் கண்டறியும் பொருட்டு நெலுவ பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்ற காலி மாவட்டக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், உயர்மட்ட மாடிவீட்டு முறையொன்றை பரீட்சார்த்தமாக மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை முன்வைக்குமாறு அதிகாரிகளுக்குப் பணித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். வெள்ளம் காரணமாக […]

Continue Reading

இலங்கை அமைச்சர்களுக்கு அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை??

இலங்கை அமைச்சர்களுக்கு, அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிகிச்சைகளுக்காக, அமெரிக்காவுக்கு சென்று, நாடு திரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சந்தித்து நலம் விசாரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், சகல நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம். அந்தளவுக்கு அங்கு வசதிகள் […]

Continue Reading

நாடு திரும்பினார் ரணில்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவுக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தார். பிற்பகல் 3.55 மணிக்கு எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கியூ-645 விமானத்தில் இலங்கையை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மருத்துவப் பரிசோதனைக்காக கடந்த வாரமளவில் அமெரிக்கா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்பு

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நோய்கள் தொற்றுவதில் இருந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார அமைச்சுக்கள் இதனை நோய்கள் தொற்றுவதை தடுக்க வேண்டுமென நாட்டில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை குறித்து நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார். அதேவேளை இரத்தினபுரி போன்ற சில பிரதேசங்களில் இவ்வாறு அனர்த்தம் ஏற்படும் என்பது குறித்த முன்னறிவித்தல் எதுவும் விடுக்கப்படவில்லை. முன்னறிவித்தல் விடுத்திருந்தால் சில பிரதேசங்களில் […]

Continue Reading

நாடு திரும்பினார் ரணில்

சீனாவிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான யூஎல்-142 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பிரதமர் நாடு திரும்பியுள்ளார். சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இடம்பெற்ற “ஒரே பாதை ஒரு இலக்கு” என்ற சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அண்மையில் பிரதமர் சீனா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

பிரதமரின் வெசாக் தின வாழ்த்து

நல்லெண்ணத்துடன் உலகைக் காணும், கருணையுடன் வாழக்கூடிய ஒற்றுமையான சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொவித்துள்ளர். வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளதுடன், உலகவாழ் பௌத்த மக்களின் மிகவும் புனிதமான சமய முக்கியத்துவம்மிக்க தினமான வெசாக் நிகழ்வு, புண்ணிய கருமங்கள் உட்பட சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் தனிச்சிறப்புமிக்க சமய நிகழ்வு என்றும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச வெசாக் தின […]

Continue Reading