திருமலை அபிவிருத்திக்கான பாரிய திட்டம் தயாராகி வருகிறது – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நிதியுதவியில் பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தயாராகிக் கொண்டிருப்பதாக, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். திருகோணமலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அலுவலகத்தில் இன்று (15) இடம்பெற்ற நடமாடும் சேவையில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததுடன், பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில், திருகோணமலை பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தில் பல […]

Continue Reading

புத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படாது – ரவூப் ஹக்கீம்

புத்த மதத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்த சரத்தும் உத்தேச அரசியல் அமைப்பில் இல்லையென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பில் புத்த மதத்திற்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவம் குறைக்கப்படுகின்றது என்ற காரணம் ஒன்றை மையப்படுத்தி புதிய அரசியல் அமைப்பொன்று தேவையில்லையென மகாநாயக்கர்கள் அரசாங்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ ஏனைய தமிழ் கட்சிகளோ, புத்த மதத்திற்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டுமென அரசியல் அமைப்பு சபையில் கருத்துக்கள் முன்வைக்கவில்லை. ஏனைய மத நடவடிக்கைகளுக்கு […]

Continue Reading

புதிய தேர்தல் முறைக்கு அமைச்சர் ஹக்கீம் எதிர்ப்பு

புதிய தேர்தல் முறைக்கு தான் ஒருபோதும் இணங்கப் போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ள அதேவேளை, எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் சிறுபான்மையினருக்கு நியாயம் வழங்கப்படாமை தொடர்பில் தான் கடும் எதிர்ப்பு வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading