முன்னாள் நிதியமைச்சர்களின் சந்திப்பு

முன்னாள் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று ஐ.தே.கவின் முன்னாள் நிதி அமைச்சரான ரொனி த மெல்லைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ரொனி த மெல்லின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்தில் அவரை சந்தித்து, தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதவி விலகியிருந்தார். அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுடன் […]

Continue Reading

பதவி விலகத் தீர்மானித்தார் ரவி கருணாநாயக்க

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று பகல் ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், அன்று அமைச்சர்களுக்கு எதிரான குற்றக் கோப்புக்களை விசாரிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முடியாதிருந்தது. அந்தவகையில் தற்போது மிகவும் துரிதகதியில் நல்லாட்சியில் அமைச்சர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காக தான் பெருமைப்படுகின்றேன் என்று தெரிவித்தார். அதேபோன்று சட்ட மா அதிபர் திணைக்களத்திற்குத் தான் கூறுவதாகவும், கடந்த அரசாங்கம் தொடர்பாக […]

Continue Reading

ரவி கருணாநாயக்க விவகாரம்; இன்று விபரம் வெளிவரலாம்?

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து, இன்று வியாழக்கிழமை அறியத்தரப்படுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அந்த பிரேரணையை, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியுமா அல்லது இல்லையா என்பது தொடர்பான தீர்மானமானது, சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டே, அறியத்தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய, விமல் வீரவன்ச, ஓன்றிணைந்த எதிர்கட்சியைச் சேர்ந்த 30இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டு வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், அதை விரைந்து […]

Continue Reading

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்று தீர்மானம்

முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகக் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்குக் கூடுகின்ற கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்திலேயே இந்தப் பிரேரணை தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் பிரகாரமே, அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்படும். அதன் பின்னரே, அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படும். திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் […]

Continue Reading

ஜனாதிபதி, பிரதமரைச் சந்திக்கும் கடும் முயற்சியில் ரவி கருணாநாயக்க

தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்திப்பதற்கு முயன்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியின் பின்னணியில் இருந்து செயற்படும், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் அறிவுறுத்துவாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்து கொள்வதற்கு முன்னர், தான் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் ரவி கருணாநாயக்க, இராஜினாமா செய்யவுள்ளார் என்றும் […]

Continue Reading

ரவி கருணாநாயக்க கைதாக வேண்டும் – பிரதீபன்

ரவி கருணாநாயக்கவை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நிதி மோசடி தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்வது மிகவும் கடினமான விடயம் என்றும் தெரிவித்துள்ளார். ஊழல்களை ஒழிப்பதற்காகவே அரசாங்கத்தை மக்கள் மாற்றியுள்ளார்கள். தற்போது […]

Continue Reading

வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 32 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

அமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்றைய தினம் பிணைமுறி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினார். கடந்த 26ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அன்றைய தினம் அவர் முன்னிலையாகவில்லை. ஜனாதிபதி பாதுகாப்பு சபையை கூட்டிய நிலையில் தமக்கு சில பணிகளை ஒப்படைந்திருந்ததால், அன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாதென அவர் சார்பான சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார். பின்னரான தினங்களில் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் பங்குகொண்டமை மற்றும் வெளிநாட்டு விஜயங்கள் மேற்கொண்டிருந்த நிலையில், அமைச்சர் ரவி கருணாநாயக்க […]

Continue Reading

பிணை முறி விநியோகம் குறித்து விசாரணையில் ரவி கரு கருணாநாயக்க..

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (26) முன்னிலையாகவுள்ளார். அமைச்சரை நேற்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும், அரச பணி நிமித்தம் தன்னால் ஆஜராக முடியாதென ஆணைக்குழுவிற்கு சட்டத்தரணியூடாக அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும், விசாரணைகளை தொடர்ந்தும் ஒத்திவைக்க முடியாதென தெரிவித்துள்ள ஆணைக்குழு, இன்று ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள […]

Continue Reading

அவுஸ்திரேலியாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சு!

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் முக்கிய பேச்சு வார்த்தை ஒன்றை மேற்கொண்டதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்புடன் தம்மால் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு, ஆட்கடத்தலை தடுத்தல், சுற்றுலாத்துறை, நல்லிணக்கம் போன்ற விடயங்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சமுத்திர பாதுகாப்பு உட்பட பிராந்திய பாதுகாப்பு தொடர்பான சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதலீடு, வர்த்தகம், புதிய வர்த்தக தொடர்புகள் என்பனவற்றினால் இரு […]

Continue Reading