ஒரு வாரத்திற்குள் உரிய பதில் வழங்கப்படும் – ஆளுனர் ரெஜினோல்ட் குரே

வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில், இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதிலளிப்பதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுனருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று ஆளுனர் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில், வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பதவிகள் […]

Continue Reading

ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் – ரெஜினோல்ட் குரே

ஊடகங்கள் தம்மை நாடுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் சம்பவங்களை தீவிரப்படுத்துவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், தெற்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் சம்பவங்ளைப் போன்றே யாழ்ப்பாணத்திலும் இடம்பெறுகின்றன. இந்திய அதிரடி திரைப்படங்களின் ஈர்ப்பு காரணமாக இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவதுடன், இதுபோன்ற விடயங்களை ஊக்குவிக்க வெளிநாடுகளிலிருந்து இளைஞர்களுக்கு பணம் கிடைப்பதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மக்கள் தாம் வாழ்வதற்காக நேர்மையாக உழைக்கின்றனர். […]

Continue Reading

கிரிக்கெட் போட்டி நடத்தியது வடமாகாண சபை – ஆளுனர் கூரே

வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை, கிரிக்கெட் போட்டி போன்று இருந்ததென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். வடமாகாண விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுகளை முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டதுடன் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்ற நிகழ்வுகள், ஆளுநர் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றன. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், 30 வருடகால போரின் பின்னர் ஏற்பட்ட முதலாவது வடமாகாண சபையில், இவ்வாறான குழப்பநிலைகள் ஏற்பட்டதுடன் […]

Continue Reading

வடமாகாண முதலமைச்சர் விவகாரம் – எழுத்துமூலம் தெரியப்படுத்தவில்லை என்கிறார் ஆளுனர்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து இதுவரை எழுத்துமூலம் தெரியப்படுத்தப்படவில்லையென மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தன் தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ள போதிலும், எழுத்து மூலம் இதுவரை அறிவிக்கவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக அண்மையில் 21 மாகாண சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading