அரிசி இறக்குமதிக்குத் தீர்மானம்

இந்தியாவிலிருந்து 70 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பா மற்றும் நாட்டரிசி என்பன இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பில் இந்திய தனியார் நிறுவனம் ஒன்றுடன் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இலங்கையில் அரிசி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading

இரண்டு இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி?

மூன்று மாதங்களின் பின்னர் இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வோர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி நாடளாவிய ரீதியில் இந்த வாரம் பகிர்ந்தளிக்கப்படுமென அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வோர் மற்றும் வர்த்தக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்ணாந்து தெரிவித்துள்ளதுடன், அடுத்த மாதமளவில் மேலும் 150,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக வெளியாகும் செய்தி, […]

Continue Reading

அரிசி இறக்குமதி அவசியமில்லை

நுகர்வுக்காக அரிசி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய தேவையில்லை எனவும், உரியளவு நெல் தொகை நாட்டினுள் காணப்படுவதாக அனைத்து இலங்கை அரிசி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தம்புள்ளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இலங்கை அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித பேரரா இதனைத் தெரிவித்துள்ளார்.

Continue Reading