உள்நாட்டு அரிசி சந்தைப்படுத்தப்பட்டுள்ளது

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி உள்நாட்டில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் இருந்து உடனடி தேவைக்கான அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், ஜனாதிபதியின் அறிவுறுத்தல் அடிப்படையில் 52 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி உள்நாட்டு சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

அரிசி கட்டுப்பாட்டு விலையை நீக்கத் தீர்மானம்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவற்கு வாழ்க்கை செலவு குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நெல் அறுவடை இடம்பெறுவதால் எதிர்வரும் காலங்களில் சந்தைக்கு அதிகமான அரிசி விநியோகிக்கப்படலாம் என்பதை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இறக்குமதி செய்யப்படும் அரிசி காரணமாக உள்நாட்டு அரிசியின் விலை குறைவடையக்கூடும் எனவும் வாழ்க்கை செலவு குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான […]

Continue Reading

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை

கடந்த 4ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோவுக்கான அதிகபட்ச சில்லறை விலை 90 ரூபாயாகவும், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோ 80 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசிக்கு 75 ரூபாவாகவும் சில்லறை […]

Continue Reading

நாடு அரிசித் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அபாயம்

நாட்டில் அதிக மழை வீழ்ச்சி எதிர்வரும் தினங்களில் பதிவாகுமானால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் நிலை தோன்றுமென விவசாய திணைக்களத்தின் பிரதானி ரஞ்சித் புணஸ்வர்த்தன எச்சரித்துள்ளார். பெரும்போகத்தின் உற்பத்தியின் பொருட்டு 06 லட்சம் ஹெக்டெயர் நெல் உற்பத்தி தேவைப்படுகின்ற போதிலும், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் காரணமாக 02 லட்சம் ஹெக்டெயர் அளவான நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அரிசி தட்டுப்பாடு நிலை ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வாக வேறு உற்பத்திகள் தொடர்பில் விவசாயிகள் அவதானம் […]

Continue Reading