ஹக்கீமின் செயற்பாடு தொடர்பில் ரிஷாத் அதிருப்தி

நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தில் நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஒரு மணி நேரத்தையாவது செலவழித்திருந்தால் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை இலகுவில் சரிசெய்திருக்க முடியுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தைத் தீர்த்துவைக்குமாறு, இந்தவிடயத்துடன் சம்பந்தப்பட்ட அப்போதைய நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், பள்ளிவாசல் நிர்வாகம் பலமுறை கோரிக்கைகள் விடுத்திருந்த போதும் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், தற்போதைய அமைச்சரான சம்பிக்க ரணவக்கவுடனும், […]

Continue Reading

அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை அதிகரித்தால் சட்ட நடவடிக்கை

சீனி உட்பட 12 அத்தியாவசிய பொருட்களுக்கு விலைகளை தன்னிச்சையாக அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கைகள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் அமைக்கப்பட்ட இலங்கையின் 378ஆவது சதொச விற்பனை நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இந்த வருடம் நிறைவடைவதற்குள் 500 சதொச விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். […]

Continue Reading