வடமாகாண அமைச்சுப் பதவிகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

வடமாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர் பதவி தொடர்பில் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. வடமாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரநேசன் ஆகியோர், தம் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பதவி விலகினர். இதனையடுத்து, இரு அமைச்சுக்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் பொறுப்பேற்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பதவிக்கு வேறு இருவரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், இந்தப் […]

Continue Reading

ஜேர்மன் பாராளுமன்றத் தலைவர் – இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இலங்கை வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றத்தின் தலைவருக்கும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு இன்று காலை பாராளுமன்ற கட்டிட தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் தெளிவுபடுத்தியதுடன், சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Continue Reading