இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பம்

இரண்டாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. ஏற்கனவே, அறிவிக்கப்பட்டவாறு அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அஷோக சேனானி ஹேவகே தெரிவித்துள்ளார். அத்துடன், நேற்று முன்தினமும் நேற்றைய தினமும் பாடசாலை சுற்றுச்சூழலில் துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பாடசாலை சூழல், நுளம்புகள் மற்றும் குப்பைகளின்றி இருப்பதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Continue Reading

இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்

இரண்டாம் தவணைக்காக நாளை அரச, அரச சார்பற்ற பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. பாடசாலை சூழலை சுத்தம் செய்தல் மற்றும் நிலவும் வெப்பமான காலநிலைக்கு முகம் கொடுப்பது குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்துமாறு கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளது. இதற்கிணங்க, பெற்றோர், பழைய மாணவர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மாகாண சபை அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டு, பாடசாலை சூழல் நுளம்புகள் மற்றும் குப்பைகளின்றி இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் […]

Continue Reading