காணாமல் போனோரது விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்!

காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகண்டுஇ அவர்களது உறவினர்களது நம்பிக்கையை கட்டியெழுப்புவது உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோலும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றைஇ நேற்று (25) நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாகஇ கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களையும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும். இரகசிய தடுப்பு முகாம்களில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்து வரும் நிலையில்இ குறித்த […]

Continue Reading

தொடர் கதையாகும் துப்பாக்கி சூட்டின் பின்னணிகள் ஆராயப்பட வேண்டும் என்கிறார் சிவசக்தி எம்.பி

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெறுவதைப் பார்க்கின்றபோது, இதன் பின்னணியை உன்னிப்பாக ஆராய வேண்டியுள்ளது” என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசகத்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நல்லாட்சி அரசாங்கம் உருவாவதற்கு, எத்தகைய நிபந்தனைகளையும் விதிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது. ஆனால், தற்பொழுது நடைபெறுகின்ற விடயங்களை அவதானிக்கையில், தீட்டிய மரத்தையே பதம் பார்ப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. “யுத்தம் முடிவடைந்து […]

Continue Reading

சுயதொழில் முயற்சிக்கான வாய்ப்புக்களையும் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

வேலையற்ற பட்டதாரிகளான இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்புக்காக போராட்டங்களை நடத்தும் அதேவேளை சுயதொழில் முயற்சிக்கான வாய்ப்புக்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கப் பிரதிநிதிகளுடன்  (24) கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தொவிக்கையில், ”சுயதொழில் முயற்சியாளர்களுக்கு முதலீட்டு உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. கிடைக்கப்பெறும் அரசியல் அதிகாரங்களைக் கொண்டு […]

Continue Reading

ஒன்று அல்ல பத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் உருவாக வேண்டும்!

ஒன்று அல்ல பத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் நாட்டில் உருவாகினாலும் அதனை வரவேற்போம் என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள மருத்துவர் பற்றாக்குறையை நீக்க இந்தியாவிலிருந்து 200 மருத்துவர்களை கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர்களை இரண்டு வருடங்களுக்கு இங்கு சேவையாற்றுவதற்கு வருமாறு யாழில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக கோரிக்கை விடுக்க வேண்டும். வடக்கில் தற்போதுள்ள மருத்துவர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு இது பெரும் உதவியாக இருக்கும் என […]

Continue Reading