அரசியல் கைதிகள் விடயத்தில் முதலமைச்சரின் நிலைப்பாடு – தெளிவுபடுத்துகிறார் சிவாஜிலிங்கம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தொடர் நடவடிக்கைகளில் தான் ஈடுபடவுள்ளதாக முதலமைச்சர் தன்னிடம் தெரிவித்தாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், தற்போது தமிழ் அரசியல் கைதிகளுடைய பிரச்சினைகள் ஏறக்குறைய மறந்தது போன்ற நிலையை எட்டியுள்ளதாகவும், தொடர்ந்தும் கைதிகள் சிறைகளுக்குள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய உறவினர்கள் இது தொடர்பாக […]

Continue Reading

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு – 15 கையெழுத்து

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து 15 மாகாண சபை உறுப்பினர்களின் சார்பிலான மனு வடமாகாண ஆளுனரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆதரவு தெரிவித்து நேற்று பிற்பகல் யாழ். மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண முதலமைச்சர் சி.விவிக்கினேஸ்வரன் தொடர்பான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான கூட்டமைப்பினர் முன்னெடுக்கும் செயற்பாட்டினை வன்மையாக கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் சமூக ஆய்வாளர்கள், சட்டத்தரணிகள், நலன் விரும்பிகள், […]

Continue Reading

அரசாங்கத்தை நம்பிப் பயனில்லை – சிவாஜிலிங்கம்

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்த அரசாங்கத்தை நம்பி பயனில்லையென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் இருப்பதாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் எங்களுடைய இனத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக மாற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

படையினரின் நிகழ்வுகளுக்கு மாணவர்கள் வேண்டாம் – சிவாஜிலிங்கம்

வடமாகாண பாடசாலை மாணவர்கள் படையினரின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை உடனடியாக தடுக்க வேண்டுமென யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளார். இதற்கு வடமாகாண கல்வி அமைச்சு உடனடியாகவே நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்துள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், பனங்காட்டுக்குள் புத்தி கூர்மை என்ற தலைப்பில் யாழ். […]

Continue Reading

12 முதல் 18 வரை படுகொலை வாரம்

மே 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தமிழினப் படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன், முள்ளிவாய்க்காலில் மே 18ஆம் திகதி இடம்பெற்ற தமிழினப் படுகொலையை கடந்த இரு வருடங்களாக தமிழினப் படுகொலை வாரமாக அனுஷ்டித்து வரும் நிலையில், இவ்வருடமும் அனுஷ்டிக்கவுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செம்மணிப் பகுதியில் 12ஆம் திகதி நினைவு ஏந்தல் […]

Continue Reading