இலங்கையருக்கு தென் கொரிய அரசு விருது வழங்கி கௌரவிப்பு!

தன் உயிரைப் பணயம் வைத்து பெண் ஒருவரைக் காப்பாற்றிய இலங்கையருக்கு தென் கொரிய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்ந்த ஹசலக மினிபே நிமலசிறி பண்டார என்பவர் தென் கொரியாவில் தொழிலுக்கு சென்ற ஒருவராவார். இவர் தென் கொரிய நாட்டவர் உட்பட பல வெளிநாட்டவர்கள் பார்த்து கொண்டிருக்கும் போது தீப்பற்றிய வீட்டின் பின் பக்க கதவினால் சென்று வயோதிப பெண் ஒருவரை காப்பாற்றியிருந்தார். இச்சம்பவம் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி பகல் 1.10 […]

Continue Reading

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மலேரியா நுளம்புகள் பரவும் சாத்தியம் உள்ளதாக தெரிவிப்பு!

மலேரியா நோய்க்கான காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவுவதற்கான அபாயமுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் எதிர்வு கூறியுள்ளார். 2016ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் அந்த நிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அண்மையில் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை நுளம்பு மீண்டும் இலங்கையில் மலேரியா நோய் பரவுவதற்கான அபாயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் […]

Continue Reading

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் பாராட்டுக்குரியது!

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபித்தமை பாராட்டுக்குரிய விடயம் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான உண்மையை கண்டறியும் பயணத்தில் இது ஒரு மைல்கல்லாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பூரண ஆரவை வழங்கும் என்றும் திரு குட்டேரஸ் மேலும் தெரிவித்துள்ளார். இந்த அலுவலகத்திற்கு தேவைப்படும் சுயாதீன ஆணையாளர்களை நியமிப்பதற்கு தமது பங்களிப்பை வழங்கவும் தயாராக இருப்பதாக ஐ. நா. ஸ்தாபனத்தின் […]

Continue Reading

பிரதமர் மக்களுக்கு பொய்களையே தெரிவிக்கின்றார்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு பொய்களையே தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீன நாட்டிற்கு விற்பது குறித்து கடந்த காலங்களில் அதிகமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் கூட்டு எதிர்க்கட்சியினர் இவற்றிற்கு எதிராக போராட்டங்களை நடாத்தினார்கள். அதன் பின்னர் குறித்த துறைமுகம் விற்கப்படாது என்ற பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆயினும் பராக்கிரம திஸாநாயக்கவை துறைமுக அதிகாரிகளின் […]

Continue Reading

சர்வதேச நாணய நிதியத்தின் 167.2 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு!

சர்வதேச நாணய நிதியத்தின் 167.2 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இது நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி எனும் திட்டத்தின் கீழான இரண்டாம் கட்ட நிதியாகும். மூன்றாண்டு வேலைத்திட்டத்தின் கீழ் 1.45 பில்லியன் அமெரிக்க டொலரினை கடனுதவியாக வழங்குவது என கடந்த 2016ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் தீர்மாணித்தது. இதன்பிரகாரம் முதற்கட்ட நிதியாக 162.6 மில்லின் அமெரிக்க டொலர் கடந்த 2016 நவம்பரில் வழங்கப்பட்டது. நிதி தட்டுப்பாட்டை குறைத்தல், அந்நியச் செலாவணி கையிருப்பை […]

Continue Reading