இலங்கை – பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷின் பிரதாமர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக, இந்த வருடத்திற்குள் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பங்களாதேஷின் வர்த்தக சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இலங்கை – பங்களாதேஷ் இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை மற்றும் பங்களாதேஷ் இடையே 12 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையில் இன்று (14) இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இன்று நண்பகல் டாக்கா நகரிலுள்ள பங்களாதேஷ் பிரதமரின் அலுவலகத்திற்குச் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷ் பிரதமரினால் வரவேற்கப்பட்டார். இதன்போது இரு நாடுகளுக்கிடையேயும் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளிலுள்ள இருதரப்பு […]

Continue Reading