இலங்கைக்கு வெள்ளி முதல் ஜீ.எஸ்.பி பிளஸ்

இலங்கைக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இம்மாதம் 19ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கான இலங்கை மற்றும் மாலைதீவுக்கான குழுவின் பிரதானி துன்-லாய் மார்கு தெரிவித்துள்ளதுடன், பாரியளவிலான வர்த்தகர்கள் மட்டுமன்றி நடுத்தர வர்த்தகர்களும் இதனால் பயனடைய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான இறுதி நடவடிக்கையாக இதனைக் கருத முடியுமென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட யோசனை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அண்மையில் தோற்கடிக்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Continue Reading