அகதிகளுக்காக இலங்கை – இந்தியா இடையே மீண்டும் கப்பல் சேவை

இலங்கை – இந்தியாவிற்கு இடையில் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொழும்பிற்கும் தூத்துக்குடிக்குமிடையிலான கப்பல் சேவையானது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த நிலையில் மீண்டும் குறித்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்பும் பட்சத்தில், அவர்களுக்கு வசதியாகவே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய அரசின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதுடன், இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு தமிழக அரசாங்கம் கடிதம் […]

Continue Reading

இந்திய மீனவப் படகுகளை விடுவிக்க இணக்கம்

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவப் படகுகளில் ஒரு தொகுதியை மீள ஒப்படைப்பதற்கு வடபகுதி மீனவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த படகுகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதுடன், கடந்தமுறை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்திய மீனவப் படகுகளின் அத்துமீறல்கள் குறைவடைந்துள்ளதாகவும், அதற்கான மாற்று நடவடிக்கைகளை இந்திய தரப்பு நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கமைய ஆரம்பத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஒருதொகுதி படகுகளை விடுவிப்பதற்கு வடபகுதி மீனவர்கள் இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் […]

Continue Reading

வடக்கில் இந்திய – இலங்கை நட்புறவு மையம்

இந்திய – இலங்கை நட்புறவு மையம் ஒன்றை வடமாகாணத்தில் நிறுவுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பளை பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் 300 கோடி இந்திய ரூபாவில் குறித்த இந்திய – இலங்கை நட்புறவு மையம் அமைய உள்ளதாக அந்த மையத்தின் நடவடிக்கை பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை நட்புறவு மையம் தொடர்பாக நேற்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் […]

Continue Reading

இந்திய மீனவர்களை விடுவிக்க வடக்கு மீனவர்களின் ஒப்புதல் அவசியம்

வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் பெறாமல் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் விடுவிக்க கூடாதென வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் வருகை மற்றும் இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பாக இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இணையத்தின் சார்பில் அதன் தலைவர் மு. ஆலம் மற்றும் உப தலைவர் ஜே.பிரான்சிஸ் மற்றும் செயலாளர் என்.வி.சுப்ரமணியம் […]

Continue Reading

இலங்கை – இந்தியா இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் தீர்மானமில்லை

இலங்கைக்கும் இந்தியாவும் இடையில் பாலமொன்றை அமைப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்ததுடன், பாலமொன்றை அமைக்கும் எதிர்பார்ப்பு இந்தியாவிடம் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து, அதன் தேவைப்பாட்டுக்கு அமைய, எதிர்காலத்தில் முடிவெடுக்கப்படுமெனத் தெரிவித்தார். முன்னதாக கடந்த வாரத்தில் இந்தியாவுக்குச் சென்ற பிரதமர் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதுடன், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் பேசியதாக இந்திய […]

Continue Reading