இன்றும் தொடர்கிறது பணிப்புறக்கணிப்புப் போராட்டம்

அஞ்சல் சேவையாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இன்று நள்ளிரவு வரையில் இந்த போராட்டம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அஞ்சல் நிலையக் கட்டிடங்கள் மற்றும் காணிகளை வெளிநாட்டு உணவக வேலைத்திட்டத்துக்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதேவேளை இந்த போராட்டம் தொடர்பில் பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு ஒழுங்கு செய்து தருவதாகவும், போராட்டத்தை கைவிடுமாறும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்துள்ள போதும், அதில் நம்பிக்கையில்லையென அஞ்சல் சேவை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Continue Reading

தபால் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்

தபால் தொழிற்சங்கங்கள் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த பணிப்பகிஷ்கரிப்பில் 28 தபால் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளதாகவும், இதற்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள 3410 உப தபால் அலுவலகங்களிலும், 640 தபாலகங்களிலும் இன்று சேவைகள் இடம்பெறாமென தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது. அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகளை இரத்துச் செய்துள்ளதாகவும், தபால் திணைக்களத்திற்கு சொந்தமான சில பழைமையான கட்டிடங்களை சுற்றுலா விடுதிகளாக […]

Continue Reading

தபால் தொழிற்சங்கங்கள் போராட்டம்

பிரதான தபால் அலுவலகங்கள், கட்டிடங்கள் பல சுற்றுலா ஹோட்டல்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு உள்ளிட்ட பிரசித்திபெற்ற நகரங்களிலுள்ள பிரதான தபால் அலுவலகங்களை சுற்றுலா ஹோட்டல்களுக்கு கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை எனவும் அத்தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Continue Reading