இலங்கையின் நிலப்பரப்பில் விரைவில் மாற்றம்

தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் காரணமாக இலங்கையில் நிலப்பரப்பு விரைவில் மாற்றமடையுமென இலங்கை நில அளவையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 65 ஆயிரத்து 610 வர்க்க பரப்பைக் கொண்டுள்ள இலங்கையின் நிலப்பரப்பு இரண்டு வர்க்க பரப்பினால் அதிகரிக்குமென நில அளவையாளர் பீ.என்.பீ உதயனாந்த தெரிவித்துள்ளார்.

Continue Reading

இலங்கைக்கு 141ஆவது இடம்

உலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கை 141ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவதில் முன்னிற்கும் ஊடகவியலாளர்கள் உலகம் முழுவதும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாக ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், 180 நாடுகளில் இலங்கை 141ஆவது இடத்தில் உள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று (03) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு ட்ரான்ஸ்பெரன்சி […]

Continue Reading

இலங்கை – தென்கொரியா வர்த்தக உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்கொரிய தலைநகர் சியோலிலுள்ள இலங்கை தூதரகம், அந்நாட்டு வர்த்தக பங்குதாரர் மேம்பாட்டுக் குழுவினரைச் சந்தித்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஐந்து கொரிய நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிளுடன் இந்த வர்த்தக மேம்பாட்டுக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கையில் இருந்து பொருட்களை தமது நாட்டுக்கு இறக்குமதி செய்ய தென்கொரிய நிறுவனங்கள் ஆர்வம் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading