தன்மீதான குற்றச்சாட்டை மறுக்கும் சிறிதரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த் தேசிய அரசியலை இல்லாதொழிக்க வேண்டுமென பலர் முயன்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கோணாவில் யூனியன்குளம் பகுதி மக்களுடனான நேற்றைய சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், கிளிநொச்சி மாவட்ட மக்கள் என்ற ஓர் எண்ணத்துடன் தான் தாங்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோமே தவிர, பிரதேச வேறுபாடுகளுடன் நாங்கள் வாழவில்லை என்பதையும் இந்த மாவட்ட மக்களை வேறுபடுத்தி பார்க்கவேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் குடும்பங்களை வைத்துக்கொண்டு, இங்கே வந்து […]

Continue Reading

வடக்கு கல்வியமைச்சரை நியமிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை அவசியம் – ஸ்ரீதரன்

வடமாகாண கல்வி அமைச்சு, கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர், வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிணக்கு ஒரு சமரசத்துக்கு வந்தமையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதற்காக நானும் என்னால் முடிந்த முயற்சியை மேற்கொண்டேன் என்பது தங்களுக்குத் தெரியும். தொடர்ந்து […]

Continue Reading

சாதகமான பதில் கிடைத்தால் நம்பிக்கையில்லா பிரேரணை மீளப்பெறப்படும் – ஸ்ரீதரன்

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் நம்பிக்கையில்லா பிரேரணை மீளப்பெறப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார் இந்த விடயம் தொடர்பாக நேற்று மாலை மூன்று மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் தானும் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்சும் பேசியதுடன், எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுடனும் பேசியிருப்பதாகவும், சம்பந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ள நிலையில், இருவரும் சாதகமான மனநிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தீவில் நாம் ஒரு சிறிய தேசிய இனம் நாம் போராடியது போராடி […]

Continue Reading

பொதுமக்களின் துன்பங்களைக் களையாமல் அமைச்சுப் பதவிக்கு ஆசைப்படும் நிலை – ஸ்ரீதரன் கவலை

பொது மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்க நாம் அர்ப்ப அமைச்சுப் பதவிகளுக்காக ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து பதவிகளைப் பெற ஆசைப்படுகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திக் கடந்த நெருப்பாறு பாகம் 2 நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், யுத்தத்தின் பின்னரான இக்காலப்பகுதியில் நாம் இப்போது எல்லாவற்றையும் மறந்து எமது […]

Continue Reading

தனிச் சிங்களக் கொடி பறக்கும் போது புலிக்கொடி ஏன் பறக்கக் கூடாது – ஸ்ரீதரன் கேள்வி

தேசியக் கொடியில் தமிழ், முஸ்லிம் மக்களை அடையாளப்படுத்தும் நிறங்களை அகற்றிவிட்டு, தனிச் சிங்களக் கொடியை தமிழர் பிரதேசத்தில் பறக்கவிட அனுமதிக்க முடியுமென்றால், விடுதலைப் புலிகளின் பெயரின்றி, புலிக்கொடிகளை நாங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கேள்வியெழுப்பினார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு விதத்திலும், சிங்கள மக்களுக்கு ஒரு விதத்திலும் சட்டம் செயற்படுத்தப்படுகிறதா என, மக்கள் அஞ்சுகின்றனர். […]

Continue Reading

பதவியைத் துறக்கத் தயார் – ஸ்ரீதரன்

இலங்கை அரசாங்கத்திற்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே தான் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு சென்றதாக கூறப்படும் விமர்சனங்கள் பொய்யானவை என, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நான் அதற்காகவே சென்றேன் என்பதை எவராவது நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் என சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக நேற்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீதரன் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை பாராளுமன்றில் உள்ள கணக்காய்வு குழு […]

Continue Reading