சைட்டம் எதிர்ப்பு நடவடிக்கை

பிரதான நகரங்களை முன்னிலைப்படுத்தி, இன்று இரவு சைட்டம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளதுடன், இதில், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Continue Reading

நாளை அடையாள வேலைநிறுத்தத்திற்குத் தயார்

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வு வழங்காமையால், நாளை நாடளாவிய ரீதியில், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்கு அமைவாக நாளை காலை 8.00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் குறித்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Continue Reading

மீண்டுமொரு தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மற்றுமொரு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு அவசர கூட்டம் ஒன்றை நடத்தி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும், மத்திய செயற்குழுவினால் இன்று எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் விளக்கமளித்த அந்த சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஹேரத், 110 இணை சங்கங்களின் பிரதிநிதிகள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். […]

Continue Reading

காலவரையறையற்ற போராட்டத்திற்குத் தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தை தேசிய மயப்படுத்துமாறு கோரி, காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இதுவிடயம் தொடர்பில் அச்சங்கத்தின் உப செயலாளர் நளிந்த ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில், காலவரையற்ற இந்த வேலைநிறுத்தம், அனேகமாக இம்மாதம் 15ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கும் எனவும், இது தொடர்பான இறுதித் தீர்மானம், நாளை கொழும்பில் கூடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த […]

Continue Reading

121 தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம்

நாடளாவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவே நாளையதினம் நாடளாவிய ரீதியில் தொழில் சங்க போராட்டத்தை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனிடையே, தாம் இந்த தொழிற்சங்க போராட்டத்தை எதிர்ப்பதாக தேசிய சேவை சங்கம் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டத்திற்கு ஏற்பாடு

சைட்டம் நிறுவனம் தொடர்பான பிரச்சினையை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. மேலும், இந்த நடவடிக்கையில் சுகாதார, கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளிலுள்ள தொழிற்சங்கங்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உபசெயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். இன்று ஹோமாகம வைத்தியசாலை முன்னால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் நடாத்தப்பட்ட போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சைட்டம் நிறுவன மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக […]

Continue Reading