சுகாதாரப் பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை மறுதினம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ். நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் 05 பேருக்கு வழங்கப்பட்டுள்ள நியாயமற்ற இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Continue Reading

இறைவரி சட்டமூலத்திற்கு எதிராக தேசிய வருமானவரி சேவை தொழிற்சங்கம் போராட்டம்

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்வைக்கப்படவுள்ள உத்தேச உள்நாட்டு இறைவரி சட்டமூலத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தேசிய வருமானவரி சேவை தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. குறித்த சட்டமூலத்தில் வரி நிர்வாகத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான அத்தியாயங்கள் உள்ளதாக அந்த ஒன்றியத்தின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளதுடன், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

கிழக்கின் கல்முணையில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, கல்முனை நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனத் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் ததகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களை போக்கி, சட்டம், ஒழுங்கை ஸ்திரப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசைக் கோரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Continue Reading

வடமாகாண சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பு

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின்உயிருக்கு பாரிய ஆபத்தினை ஏற்படுத்திய சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்தும், நீதியான பல்கோணங்களில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வடமாகாண சட்டத்தரணிகள் நாளை திங்கட்கிழமை (24.07) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். யாழ். நீதிமன்ற வளாகத்தில் இன்றையதினம் ; (23.07) வடமாகாண சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் இடம்பெற்றதை தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணியும், யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியும், வடமாகாண சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவியுமான சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சரத் […]

Continue Reading

தபால் தொழிற்சங்கங்கள் போராட்டம்

தபால் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது. தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் சுற்றுலா ஹோட்டலை நடத்த தீர்மானித்தமை மற்றும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படாமை போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளதுடன், இதற்குரிய தீர்வு வழங்கப்படாவிடில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் தொடர் […]

Continue Reading

பணிப்பகிஷ்கரிப்புக்கு எதிரணி ஆதரவு

நாளை மறுதினம் நாடு முழுவதிலும் முன்னெடுக்கவுள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து பல்வேறு தொழிற்சங்கங்கள், நாடுமுழுவதும் நாளை மறுதினம் முன்னெடுக்கவுள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கு ஒன்றிணைந்த எதிரணியினர் ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Continue Reading

சைட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் போராட்டத்திற்கு முஸ்தீபு

வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் பல ஒன்றாக இணைந்து வேலைநிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ள தயாராகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் மே மாதம் முதல் 05 நாட்களுக்குள் ஏதாவது ஒரு நாளில் முன்னெடுக்கப்படும் எனவும், குறித்த வேலைநிறுத்தத்தில் சுமார் 160 தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

முடிவுக்கு வந்தது வேலைநிறுத்தம்

இலங்கை பெற்றோலியவளக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள தொழிற்சங்கங்களால் இன்று ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

Continue Reading

பெற்றோலியத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை பெற்றோலியவள கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள தொழிற்சங்கங்கள் சில வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. திருகோணமலை துறைமுகத்திலுள்ள எரிபொருள் தாங்கியை இந்தியாவுக்கு வழங்க எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குறித்த போராட்டத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் வாகன சாரதிகள் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இந்த விடயம் குறித்து அமைச்சர் சந்திம வீரக்கொடி கருத்துத் தெரிவிக்கையில், இன்று காலை தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைக்கு […]

Continue Reading