குளிர்பானங்களுக்கான மேலதிக சீனிக்கு வரி

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் மேலதிக சீனிக்கு வரி அறவிட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. உலக சுகாதார அமைப்பிற்கமைய, 100 மில்லிலீற்றர் குளிர்பானத்திற்கு சேர்க்க வேண்டிய அதிகூடிய சீனியின் அளவு 6 கிராம் எனவும், அதற்கு மேலதிகமாக சேர்க்கப்படும் ஒவ்வொரு கிராம் சீனிக்கும் ஒரு ரூபா வரி அறவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளதுடன், இதுதொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

சீனிக்கான விஷேட வர்த்தக வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான விஷேட வர்த்தக வரியை இன்று நள்ளிரவு முதல் 8.00 ரூபாவால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் சீனியின் விலை வீழ்ச்சியடைந்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்ததுடன், வரி அதிகரிக்கப்படுவதன் ஊடாக உள்நாட்டு சந்தையில் சீனியின் விலை உயர்வடையாதென மேலும் தெரிவித்துள்ளது. உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உலக சந்தையில் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 10 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சு […]

Continue Reading

சீனி விலை அதிகரிப்பு?

இறக்குமதி செய்யப்படுகின்ற சீனிக்கான விஷேட பண்ட வரி இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுமென்றும், இதற்கு அமைவாக ஒரு கிலோகிராம் சீனிக்காக 10 ரூபா விஷேட பண்ட வரி அறவிடப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading