சீனி விலை குறைவடைவு

ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விற்பனை விலை 99 ரூபாவிலிருந்து 96 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் இந்த விலைக் குறைப்பு அமுலுக்கு வருமென சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

சீனி விலை அதிகரிக்க வாய்ப்பில்லை

சந்தையில் சீனியின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இல்லையென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. சீனிக்கான இறக்குமதி வரி அண்மையில் 10.00 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும், வரி அதிகரிப்பிற்கு அமைவாக சந்தையில் சீனியின் விலையை அதிகரிக்கவில்லையென சீனி இறக்குமதியாளர்கள் சங்கம், நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சந்தையில் சீனி விலை அதிகரிக்கப்பட்டிருக்குமாயின் அது சட்டவிரோதமானதென நிதி அமைச்சை மேற்கோள்காட்டி தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் ஒரு […]

Continue Reading

சீனி விலை மோசடிக்கு எதிராகக் கடும் நடவடிக்கை

வெள்ளை சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுமென நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டமூலத்தின் 18:1 சரத்தின் அடிப்படையில் வெள்ளை சீனி கட்டுபாட்டு விலையுடனான பொருள் என அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் காரணமாக கட்டுப்பாட்டு விலையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Continue Reading