தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களை விசாரிக்க சொல்லவில்லையாம் – சுமந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐநா அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார் . இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட […]

Continue Reading

50 ஆயிரம் கல்வீடுகள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு

வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்காக 50,000 கல் வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொருத்து வீடுதான் என்று மீள்குடியேற்ற அமைச்சும், அமைச்சரும் ஒற்றைக் காலில் நின்ற போதிலும், ஜனாதிபதி தமக்குக் கீழுள்ள நல்லிணக்க அமைச்சு மூலம் 50 ஆயிரம் கல் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதனைத் தாம் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

சட்டத்தைக் கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது – சுமந்திரன்

பொலிஸார் சட்டத்தை கையில் எடுத்து அநீதி இழைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், சட்டத்தை நடைமுறைப்படுத்தவே பொலிஸாருக்கு உரிமையுள்ளதாகவும், அதனை மீற அனுமதியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, யாழில் இடம்பெறும் சட்டவிரோத மண் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்து சட்டத்தை அமுல்ப்படுத்த பொலிஸாருக்கு […]

Continue Reading

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முடியாது – சுமந்திரன்

எத்தகைய நெருக்குவாரங்கள் வந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் தீயசக்திகளின் செயற்பாடு வெற்றியளிக்காதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போரால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றமை தொடர்பில், ஊடமொன்றிற்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தவறு செய்தவர்களுடன் சேர்த்துத் தவறு செய்யாதவர்களையும் தண்டிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற […]

Continue Reading

பலாலியிலுள்ள காணிகள் விடுவிப்புக்கு முடிவில்லை – சுமந்திரன் எம்.பி (Photo)

பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும், சிவஞானம் சிறிதரன், சரவணபவன், தர்மலிங்கம சித்தார்த்தன் உட்பட இராணுவம், கடற்படை, விமானப்படையினர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் […]

Continue Reading

பட்டதாரிகளின் போராட்டத்திற்குத் தீர்வு – சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முகாமைத்துவ திணைக்களத்திற்கு அனுப்பி அதற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அமைச்சரவையின் அனுமதிகள் கிடைத்த பின்னர் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஐpனோல்ட் குரே தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு […]

Continue Reading

சுமந்திரன் மீதான கொலை முயற்சிக் குற்றச்சாட்டு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 14 தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில், நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த […]

Continue Reading