யாழில் பொலிஸார் மீது துரத்தித்துரத்தி வாள் வெட்டு!

வாள்வெட்டிற்கு இலக்கான இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் இன்று (30) பிற்பகலுக்கு பிற்பாடு கொக்குவில், பொற்பதி பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸார் என தெரிவிக்கப்படுகிறது. 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தி துரத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வாள்வெட்டில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பு தெரிவிக்கிறது.

Continue Reading

வவுனியாவில் ஒரே நபர் மீது இரண்டாம் முறையும் வாள் வெட்டு!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (25) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது – 27) என்பவருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய சத்தியசீலன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் […]

Continue Reading