முதலமைச்சரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தார் தவராசா

வடமாகாண அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பாக நான் கூறியிருந்த குற்றச்சாட்டுக்களுக்கு தர்க்க ரீதியாக பதிலளிக்க தெரியாமல் கத்தோலிக்க மக்களின் திருத்தந்தை பாப்பாண்டவர் போல் தான் ஊடகங்களுக்கு எல்லாவற்றையும் கொடுப்பதாக முதலமைச்சர் பாப்பாண்டவருடன் ஒப்பிட்டு பேசியமை மிக தவறானது என்பதுடன் மிக கண்டனத்திற்குரிய கருதாகவும் அமைந்திருப்பதாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் வட மாகாண சபையின் அமர்வில் தன்னால் 21.07.2017ம் திகதியன்று வட மாகாண சபையின் கடந்தகால […]

Continue Reading

எதிர்க்கட்சித் தலைவரைச் சாடினார் வடக்கு முதலமைச்சர்

கட்சித் தலைமை அடுத்த தேர்தலுக்குள் துரத்திவிடுமோ என்ற அச்சத்தில் பல கட்சித்தலைமைகளுக்கு விளம்பரப்படுத்த எதிர்க்கட்சி தலைவர் தவராசா தன்மீது தவறான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக முதலமைச்சர் வீ.வி.விக்னேஸ்வரன் சாடியுள்ளார். வடமாகாண சபையின் 102வது அமர்வு இன்றையதினம் பேரவையில் நடைபெற்ற போது, கடந்த அமர்வின் போது, வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சாடினார். அதன்போது, முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது, கட்சியைப் பற்றி கதைக்க […]

Continue Reading

தன்மீதான குற்றச்சாட்டை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்

முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளை மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளதாக வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 102வது அமர்வு இன்றையதினம் (17.08) பேரவையில் இடம்பெற்றது. அமர்வின் போது அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், வட்டுக்கோட்டைக்குப் போகுவதும் வழி எதுவென்றால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்பது போல் அமைந்துள்ளது முதலமைச்சரின் இன்றைய வடமாகண சபை அமர்வின் போதான உரை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 21.07.2017ம் திகதிய சபை அமர்வில் வட மாகாண […]

Continue Reading

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் ஆராய வேண்டும் – சி.தவராசா

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் எத்தனைபேர் இரட்டைப் பிரஜா உரிமை பெற்றுள்ளனர் என்பதனை நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் உடன் வெளியிட்டு நாட்டில் பேசப்படும் கூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டுமென வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பில் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைப் பிரஜாவுரிமை இருப்பின் அது 19வது திருத்தச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்ற சர்ச்சை தற்போது அதிக பேசுபொருளாகவுள்ளதுடன், ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் […]

Continue Reading