கூட்டு எதிரணி பொதுவேட்பாளரை நிறுத்தப் போவதில்லை

கூட்டு எதிர்க்கட்சி ஒருபோது பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், கூட்டு எதிர்க்கட்சி ஒருபோதும் விஜயதாஸ ராஜபக்ஷவிற்காக முன்நிற்காது என்றும், ஐக்கிய தேசிய கட்சியில் நியமனம் வழங்குவது மற்றும் நீக்குவது தொடர்பில் தீர்மானம் எடுப்பது அந்தக் கட்சியின் உரிமை என்ற போதிலும், விஜயதாஸ ராஜபக்ஷ பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமையின் காரணமாக அவரை பதவி நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் […]

Continue Reading

புலம்பெயர் அமைப்புக்களின் விருப்பிற்கே உத்தேச அரசியலமைப்பு உருவாகிறது

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே உத்தேச அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அதேவேளை, அரசாங்கத்தினால் தேர்தல் ஒன்றை நடத்த முடியவில்லை என்பதுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களை அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாகவும், பௌத்த பிக்குகளுடன் மோதல்கள் இடம்பெறுகின்றன. இலங்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவு குறைவடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading