கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. கொள்கை பரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் ஆரம்பமான இக்கலந்துரையாடலில் கிளிநொச்சியின் அரசியல் மற்றும் அபிவிருத்தி குறித்து பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மாகாண சபை உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Continue Reading

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினப் பேரணி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் இம் முறை மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மே 01 ஆம் திகதி திங்கட்கிழமை தொழிலாளர்களி;ன உரிமைகளை வென்றெடுப்பதற்காக மேதினம் மிகப் பெரியளவில் கொண்டாடப்படுகின்றது. ஆந்தவகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின கூட்டம் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளன.  தொழிலாளர் உரிமை, மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, ஐக்கிய […]

Continue Reading

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டாயுரி, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் விடுவிக்காதுள்ளமை, காணாமற்போன உறவுகளின் போராட்டங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரணடைந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் அமைப்பதிலுள்ள கால தாமதம் குறித்தும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டாயுரி வருத்தத்தை தெரிவித்ததாகவும் […]

Continue Reading