திருமலையில் இளைஞன் தற்கொலை

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனையாவெளிப் பிரதேசம் யாட் அடைவீதியில் நேற்று இளைஞரொருவர் தற்கொலை செய்துள்ளார். 18 வயதுடைய ரேமன சரோன் குயின்டன் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் மகன் வேலைக்கு செல்லாததால் தான் கடிந்து கொண்டதாகவும், கோயிலுக்கு சென்று திரும்பி வந்து மகனை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதாகவும் தற்கொலை செய்துகொண்டவரின் தாயார் தெரிவித்தார். மேலும் 10.00 மணிதொடக்கம் 10.30 வரையிலான காலப்பகுதில் தற்கொலை செய்துகொண்ட நபர், அவசரமாக போன்காட் ஒன்றை […]

Continue Reading

பொருத்து வீட்டை வழங்கக் கோரி கிழக்கில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் இன்று, 30 வருட யுத்தத்தினால் வீடுகளை இழந்த கிழக்கு மாகாண மக்கள் தமக்கும் இந்திய அரசின் உதவி திட்ட அடிப்படையில் அமைத்துக் கொடுக்கப்படும் பொருத்து வீடுகளை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது, 12.00 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஓன்றை கையளித்ததுடன் நிறைவடைந்தது. இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் யுத்தத்தினால் வீடுகளை […]

Continue Reading

நீதித்துறை மீதான அச்சுறுத்தலை கண்டித்து திருகோணமலையில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், ”நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், நீதிபதி இளஞ்செழியனை காப்பாற்ற முயன்ற அவரது மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகிய நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் காயமடைந்துள்ளார். இந்தச் […]

Continue Reading

திருமலையில் 40 மீனவர்கள் கைது

திருகோணமலை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்பகுதியில் மீன்படியில் ஈடுபட்ட கிண்ணியா மூதூர் பிரதேச மீனவர் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அதேவேளை, 05 டிங்கி படகுகளும், 05 இயந்திரங்களும், 05 வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் திருகோணமலை சம்பூர், கெங்கை, உப்பாறு போன்ற பிரதேசங்களில் கரையில் இருந்து சுமார் 03 கிலோ மீற்றர் கடலுக்குள் மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

Continue Reading

மூதூர் மாணவிகள் துஷ்பிரயோக சம்பவ அடையாள அணிவகுப்புத் தொடர்பில் சிக்கல்

திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேக நபர்களை பாதிக்கப்பட்ட மாணவிகளினால் அடையாளம் காட்ட முடியவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுகின்றது. கடந்த 29ஆம் திகதி அந்த பிரதேசத்திலுள்ள அரசு தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சைவ சமய வகுப்புக்கு சென்றிருந்த 6 முதல் 8 வயது வரையான மூன்று மாணவிகள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் […]

Continue Reading

திருமலையில் வாள்வெட்டு – மூவர் படுகாயம்

திருகோணமலை, கன்னியா, கிளிகுஞ்சு மலை பகுதியில் மூவர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையே நேற்று மாலை ஏற்பட்ட கைகலப்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது கன்னியா, மாங்காயூற்று பகுதியைச் சேர்ந்த டி.ஜானகி (59 வயது) அவரது மகனான டி.பிரபாகரன் (42 வயது) மற்றும் கன்னியா கிளிகுஞ்சுமலை பகுதியைச் சேர்ந்த ஆர்.குகதாஸ் (26 வயது) ஆகியோர் எனவும் தெரியவருகின்றது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, படுகாயமடைந்த 26 வயதுடைய நபர் […]

Continue Reading

திருமலையில் புராதன கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருகோணமலையில் திருமங்களாய் காட்டுப் பகுதியிலுள்ள அழிவடைந்த சிவாலயத்தில் இருந்து 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட கிளிவெட்டிப் பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து சுமார் 08 கிலோமீற்றர் தொலைவிலுள்ள லிங்கபுரம் என்ற காட்டுப் பிரதேசத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. திருமங்களாய் சிவன் ஆலயத்தில் தொல்லியல் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் அண்மையில் நடத்திய ஆய்வுகளின் போது இந்த கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

திருமலையில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த பிக்குவை கைது செய்யுமாறு வலியுறுத்தி சட்டத்தரணிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலையில் கடந்த 24ஆம் திகதி மாகாண சபைக்கு முன்பாக இடம்பெற்ற வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்பாட்டத்தின் போது அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அவரின் உத்தரவை கிழித்து எறிந்து காலால் மிதித்த வேலையில்லா பட்டதாரியான பௌத்த பிக்குவை கைதுசெய்ய வலியுறுத்தியும், கண்டித்தும் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று தமது பணிகளை புறக்கணித்து நீமன்றத்திற்கு முன்னால் […]

Continue Reading