வவுனியாவில் வர்த்தகர் மீது வாள்வெட்டு

வவுனியா, கல்மடு பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 10.20 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் காயமடைந்த வர்த்தகர் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள் சகிதம் வந்த குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், வர்த்த நிலையத்திற்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ள அதேவேளை, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

வவுனியா மூன்றுமுறிப்பில் விபத்து இருவர் படுகாயம்

வவுனியா மூன்றுமுறிப்பு எனும் பகுதியில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற லொறியொன்று பழுதடைந்த நிலையில், வீதியோரமாக நிறுத்திவைக்கப்பட்டு பழுதுபார்க்கப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டொல்பின் ரக வானொன்று குறித்த லொறியின் பின்னால் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வானில் சாரதியும், லொறியை பழுதுபார்த்துக் கொண்டிருந்தவருமே காயமடைந்துள்ளனர். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

வவுனியாவில் ஒரே நபர் மீது இரண்டாம் முறையும் வாள் வெட்டு!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (25) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது – 27) என்பவருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய சத்தியசீலன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் […]

Continue Reading

புலிகள் அமைப்பிற்கு ஆட்சேர்ப்பு செய்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச் சட்டம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்னும் குற்றம் சுமத்தப்பட்டவர்க்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற போது இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன் என்பவர் கொழும்பு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர். இவர் மீதுஇ கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர்இ தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் […]

Continue Reading

நல்லூர் தாக்குதலுக்கு வவுனியா மன்னாரில் கண்டணம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சிக்கு வவுனியா மன்றும் மன்னாரில் கண்டன பேரணி இடம்பெற்றள்ளது. பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (25.07.2017) வவுனியாவில் அமைதிப் பேரணி ஒன்று நடைபெற்றது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனை சந்தையின் முன்பாக ஆரம்பமான கண்டனப் பேரணி பஸார் வீதி வழியாக வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியை வந்தடைந்துஇ பின்பு அங்கிருந்து […]

Continue Reading

நாட்டின் வடக்கே உள்ள நீதி மன்றங்களின் செயற்பாடுகள் இன்று ஸ்தம்பிதம்!

நாட்டின் வடக்கே உள்ள நீதி மன்றங்களின் பணிகள் இன்று முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமே இதற்கு கபரணமாகும். குறித்த சம்பவம் கடந்த 22ம் திகதி யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்றது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் பொருட்டு வடக்கு மாகாண சட்த்தரணிகள் இப்பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. சட்டத்தரணிகள் […]

Continue Reading

டிப்பர் சாரதிகள் போராட்டம்

வவுனியாவிலுள்ள எமது கனிய வளங்களை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்க வேண்டாமெனக்கோரி டிப்பர் சாரதிகள் போராட்ட பேரணியை முன்னெடுத்துள்ளனர். குறித்த பேரணி இன்று வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி மகஜர் அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிறைவடைந்துள்ளது. அதில், எமது பகுதிகளிலுள்ள கனிய வளங்களான கிரவல் அகழும் இடத்தினை பெரும்பான்மை தனியார் இனத்தவருக்கு கொடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதனால் இங்குள்ள டிப்பர் சாரதிகள், […]

Continue Reading