மத்திய மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் பணி நீக்கம்!

மத்திய மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை தப்பிக்க விட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற போது லலித் ஜயசிங்க வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றியுள்ளார். கொழும்பில் அவசரமாக ஒன்றுக்கூடிய பொலிஸ் ஆணைக்குழு லலித் ஜயசிங்கவை பணிநீக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. பொலிஸ்மா அதிபர் […]

Continue Reading

வித்தியா படுகொலையின் முக்கிய சாட்சியம் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான முக்கிய சாட்சியப்பதிவு, யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சாட்சியம் அளித்துள்ளார். குறித்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கியதான நீதாய விளக்கம் (ட்ரயல் அட் பார்) முறையில் இடம்பெற்று வருகின்றது. அதேவேளை நீதாய விளக்க முறை விசாரணைக்காக நீதிபதிகள், சட்டத்தரணிகள், பொலிஸார் செல்வதை ஒளிப்பதிவு செய்வதற்கு […]

Continue Reading