மற்றுமொரு பதவியை இழக்கிறார் விஜயதாஸ ராஜபக்ஷ

அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பைமீறி, பகிரங்க விமர்சனத்தை மேற்கொண்டமையால், நீதி மற்றும் புத்த சாசன அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ மீண்டுமொரு தடவை பதவியிழக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் மஹரகம தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக, விஜயதாச ராஜபக்ஷ பதவி வகிக்கும் நிலையில், அந்தப் பதவியையே அவர் இழக்கவுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக தேசிய இளைஞர் சபையின் தலைவர் எரங்க வெலியன்ககே, நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

அமைச்சரவை தேசிய வளங்களை விற்பனை செய்கிறது – முன்னாள் நீதியமைச்சர்

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்யும் அமைச்சரவையில் இருந்தமையானது, மனச்சாட்சிப்படி வெட்கப்பட வேண்டிய விடயமென முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் அனுப்பிவைத்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், வரலாற்றில் அனைத்து நீதியமைச்சர்களுக்கும் எதிராக இருந்த குற்றச்சாட்டை விடவும் மிகவும் வித்தியாசமான குற்றச்சாட்டு மூலம் தான் பதவி நீக்கப்பட்டதாகவும், அதாவது, வரலாற்றில் […]

Continue Reading

பதவி நீக்கத்தை ஏற்றுக் கொள்வதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

அமைச்சர் பதவிகளில் இருந்து ஜனாதிபதி தன்னை நீக்கியதை ஏற்றுக்கொள்வதாக விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமைக்கான கடிதத்தை அவருக்கு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

விஜயதாஸ ராஜபக்ஷவிடம் கொடுக்கல் வாங்கல்கள் இல்லை – முன்னாள் ஜனாதிபதி

தமக்கும் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கும் இடையில் எந்த கொடுக்கல் வாங்கல்களும் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், விஜயதாஸ ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பபட்டது. இதில் பதில் வழங்கிய மஹிந்த ராஜபக்ஷ, தமக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலேயே கொடுக்கல் வாங்கல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதைப் போன்றே, இதுவும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு […]

Continue Reading

ஜனாதிபதியைச் சந்தித்தார் நீதியமைச்சர்

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் அமைச்சர் இதுவரையில் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை என்றும், ஜனாதிபதியின் இறுதி முடிவு வரும் வரைக்கும் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சுப் பதவியில் இருந்து விலகமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைய அமைச்சரின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் […]

Continue Reading

விஜயதாஸ ராஜபக்ஷவின் பதவியை விலக்குமாறு கோரிக்கை

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் அமைச்சரவை அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவில் இது தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹாசிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானங்களுக்கு அமைய அவர் செயற்படாததன் காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் அவர் செயற்பட்டதாகவும் […]

Continue Reading

விஜயதாஸ ராஜபக்ஷ தொடர்பில் தேரர்களின் கருத்து

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை, அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டாமென தேரர்கள் குழுவினர் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். பௌத்த சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு இன்று காலை வருகைதந்து, அமைச்சரை சந்தித்து ஆசீர்வாதம் வழங்குவதற்காகவும், பதவியை இராஜினாமா செய்ய வேண்டாமெனக் கோருவதற்காகவும் வருகைதந்ததாகத் தெரிவித்த போதிலும், அமைச்சர் அமைச்சர் அங்கு வருகைதராத காரணத்தினால் அதிகாரிகளை சந்தித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவி […]

Continue Reading

இன ஐக்கியத்திற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது

இந்நாட்டு மக்களுக்கு தேவையாக இருக்கும் சமாதானம், அபிவிருத்தி மற்றும் இன ஜக்கியத்திற்காக இந்த அரசாங்கமானது தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளதாக புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இரண்டு வருடங்களுக்கு முன் கட்சி ரீதியாக முரண்பட்ட மக்கள் தனிப்பெரும்பான்மையை ஒரு கட்சிக்கு கொடுக்கவில்லை என்பதால், மக்களின் முடிவுக்கு அமைய தேசிய அரசாங்கம் அமையபெற்றதாகத் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் இம்முடிவுக்கு தலைவணங்குகின்ற போதிலும், இம்முடிவுக்கு எதிராக […]

Continue Reading

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய முடியாது – விஜயதாஸ ராஜபக்ஷ

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லையென நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பின் முன்னணி ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண விருந்துபசார வைபவமொன்றில் பங்கேற்றிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், தான் அமைச்சுப் பதவியை துறக்கப் போவதில்லை எனவும், அரசாங்கம் விரும்பிய தீர்மானத்தை எடுக்கும் வரையில் காத்திருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அன்று போலவே இன்றும் தாம் சரியான விடயங்களை கூறுவதற்கு அஞ்சியதில்லை எனவும், அண்மையில் தான் வெளியிட்ட கருத்துக்களுக்கு பௌத்த மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட […]

Continue Reading

விஜயதாஸ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை; விரிவான கலந்துரையாடல்

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு எதிராக முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எங்களது கட்சிக்கு எந்தவித கருத்து முரண்பாடுகளும் இல்லை என்ற போதிலும், இதுதொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி கூடவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது ஆழமாக கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையா?

நீதிமன்ற மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது வெறும் செய்தியென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டதுடன், ரவி கருணாநாயக்க விலகிச் சென்றமை சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதுடன், பண்டாரநாயக்கவுக்கு பின்னர் இதுவரை இவ்வாறான விலகிச் சென்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Continue Reading

தகுதியற்றவர்களின் நியமனத்தால் சிக்கல்நிலை

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரம் மற்றும் அரவணைப்பிற்கிணங்க, பின்வாசலால் பொது நம்பிக்கை பொறுப்பாளர் பதவிக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டமை, அந்த திணைக்களத்தின் நடவடிக்கைகள் பாதிப்படைய காரணமானதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, அடுத்துவரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இவற்றை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்கள நடவடிக்கைகள் குறித்து ஆராய நேற்று விஷேட விஜயம் ஒன்றை மேற்கொண்ட வேளையே, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மேலும், குறித்த திணைக்களம் கடந்த காலங்களில் புத்தசாசன […]

Continue Reading