ஐ.தே.கவின் தனிவெற்றி ஜனாதிபதியினாலேயே தடைப்பட்டது – அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா

ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த உடனேயே நாடாளுமன்ற தேர்தலை நடத்த ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ளாதது, ஐக்கிய தேசிய கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்ற எண்ணத்திலேயென அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், அவ்வாறு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் உடனே நாடாளுமன்ற தேர்தல் ஒன்று இடம்பெற்றிருக்குமானால் இன்று ஐக்கிய தேசிய கட்சி தனி கட்சியாக ஆட்சி அமைத்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

கடந்த அரசாங்கத்தின் ஊழல்களும் ஆராயப்பட வேண்டும் – அமைச்சர் விஜிதமுனி சொய்சா

கடந்த அரசாங்கத்தினால் இடம்பெற்ற ஊழல், மோசடி குறித்து ஆராயாமல் இருப்பது பிரச்சினைக்குரியதென அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், முன்னைய அரசாங்கத்தின் ஊழல் குறித்து ஆராயப்படாமல் இருப்பது தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் தவறு என்றும், தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறுகின்ற ஊழல் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் விசாரணை நடத்துகிறது. வரலாற்றில் முதல்முறையாக அமைச்சர் ஒருவர் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வெளிவிவகார […]

Continue Reading