வடக்கு முதலமைச்சருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மனுத்தாக்கல்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமையை எதிர்த்து வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்குமாறும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடைவிதிக்குமாறும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார். இந்த மனுவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், ஜி.குணசீலன், கே.சிவநேசன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, […]

Continue Reading

காணாமற் போனோர் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கையில்லை – வடக்கு முதல்வர்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென வடமாகாண முதலமைச்சரின் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களில் தொடர்ந்தும் அவர்களுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

யாரை அமைச்சுப் பதவிக்கு நியமிப்பது என்பது எனது முடிவு – வடக்கு முதலமைச்சர்

கட்சி நலன்கருதி அமைச்சுப் பதவிக்கு ஒருவரை சிபாரிசு செய்வது உங்கள் பொறுப்பாக இருக்கின்ற போதிலும், ஆட்சி நலம் சார்ந்து நடவடிக்கை எடுப்பது முதலமைச்சரின் பொறுப்பென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா, செவ்வாய்க்கிழமை (22) அனுப்பியிருந்த கடிதத்துக்கு, முதலமைச்சர் நேற்று (23) அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கட்சிகளால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லாது பிறரை முன்னைய அமைச்சரவையில் உள்ளடக்கியதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். அது உண்மையே என்றும், அமைச்சர்களை […]

Continue Reading

குற்றம் நிரூபிக்கப்படாத பட்சத்தில் யாரும் குற்றவாளிகளல்ல – வடக்கு முதல்வர்

வடமாகாணத்தில் புதிதாக பதவிப் பிரமாணம் செய்துள்ள அமைச்சர் சிவனேசன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் புதிய அமைச்சர்களின் பதவிப் பிரமாணம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிவநேசன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இதற்கு முன்னர் தன்னிடம் 16 அமைச்சுப் […]

Continue Reading

டெலோவின் பரிந்துரையை ஏற்க முடியாது – முதலமைச்சர்

தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் அமைச்சுப் பதவி பரிந்துரையை ஏற்க முடியாதென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ஸ்ரீகாந்தாவுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் தமது முடிவை தெரிவித்துள்ளதுடன், இந்த தீர்மானம் குறித்து டெலோவினால் பரிந்துரைக்கப்பட்ட விந்தன் கனகரத்தினத்துக்கும் முதலமைச்சர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். சுகாதார அமைச்சுப் பதவிக்கு தொழில் ரீதியாக உரிய தகைமையுடையவரே பொருத்தமானவர் என்பதால், டெலோவின் உறுப்பினரான வைத்தியர் குணசீலனை அந்த அமைச்சுப் பதவிக்கு நியமிக்க தாம் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் […]

Continue Reading

எதிர்க்கட்சித் தலைவரைச் சாடினார் வடக்கு முதலமைச்சர்

கட்சித் தலைமை அடுத்த தேர்தலுக்குள் துரத்திவிடுமோ என்ற அச்சத்தில் பல கட்சித்தலைமைகளுக்கு விளம்பரப்படுத்த எதிர்க்கட்சி தலைவர் தவராசா தன்மீது தவறான கருத்துக்களை வெளிப்படுத்துவதாக முதலமைச்சர் வீ.வி.விக்னேஸ்வரன் சாடியுள்ளார். வடமாகாண சபையின் 102வது அமர்வு இன்றையதினம் பேரவையில் நடைபெற்ற போது, கடந்த அமர்வின் போது, வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சாடினார். அதன்போது, முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது, கட்சியைப் பற்றி கதைக்க […]

Continue Reading

தன்மீதான குற்றச்சாட்டை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்

முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளை மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளதாக வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் 102வது அமர்வு இன்றையதினம் (17.08) பேரவையில் இடம்பெற்றது. அமர்வின் போது அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், வட்டுக்கோட்டைக்குப் போகுவதும் வழி எதுவென்றால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்பது போல் அமைந்துள்ளது முதலமைச்சரின் இன்றைய வடமாகண சபை அமர்வின் போதான உரை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 21.07.2017ம் திகதிய சபை அமர்வில் வட மாகாண […]

Continue Reading

வடக்கு முதல்வர் – யாழ். மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள் சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யாழ். மாவட்டப் பொலிஸ் உயரதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளார். வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, அண்மைக் காலமாக யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட சமூகவிரோத செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Continue Reading

வடக்கில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் – விக்னேஸ்வரன்

வடக்கில் இன்னும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதுடன், மக்களுடைய பயிர் நிலங்கள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் இயற்கை வளங்களை அவர்கள் உபயோகித்து வருவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட இணைப்பாளர் ஊனா மெக்கோலேய் தலைமையிலான குழுவினருடன் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை பயன்படுத்துவதாகவும், தெற்கிலிருந்து பிரசித்தமாகவே […]

Continue Reading

சிற்றங்காடி கடைத்தொகுதி திறந்துவைப்பு (Photos)

யாழ் நகர நடைபாதை வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கையின் விளைவாக 13 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட நகர மத்தி சிற்றங்காடி கடைத்தொகுதி இன்று ஞாயிற்றுக்கிழமை வடமாகாண முதலமைச்ர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார். யாழ் நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் கோரிக்கைக்கமைவாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காணியில் 76 கடைத்தொகுதிகளை கொண்டதாக இந்த நகர மத்தி சிற்றங்காடி அமைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனின் பகிரத முயற்சியின் […]

Continue Reading

வடமாகாண அமைச்சுப் பதவிகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

வடமாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர் பதவி தொடர்பில் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. வடமாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரநேசன் ஆகியோர், தம் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பதவி விலகினர். இதனையடுத்து, இரு அமைச்சுக்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் பொறுப்பேற்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பதவிக்கு வேறு இருவரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், இந்தப் […]

Continue Reading

முதலமைச்சரை ஆதரித்து கையெழுத்து வேட்டை

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக இன்று கிளிநொச்சியில் கையெழுத்து திரட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட ஜனநாயக இளைஞர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்துக்கள் திரட்டும் நடவடிக்கை கிளிநொச்சி பொதுச் சந்தை பகுதியில் இடம்பெற்றது. இதன்போது பொதுமக்கள் பலரும் இணைந்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக தமது கையெழுத்தை இட்டுள்ளனர். கையொப்பமிட்ட கடிதம் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஜனநாயக இளைஞர் அமைப்பினர் தெரிவித்தனர்.

Continue Reading