பொன்சேகாவைப் பதவி நீக்குமாறு வலியுறுத்தல்

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, அவரது அமைச்சுப் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக, அமைச்சர் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே இந்தக் கருத்தை விமல் வீரவன்ச முன்வைத்துள்ளதுடன், அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை, அமைச்சர் பொன்சேகா மீறிவிட்டதாகவும், விஜயதாஸ ராஜபக்ஷவைப் போன்றே அமைச்சர் பொன்சேகாவும் நீக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்சேகாவின் கருத்து, ஒட்டுமொத்த அரசாங்கத்தின் கருத்து […]

Continue Reading

10 பேரை சிறைப்பிடிக்க முயற்சி

புதிய நீதியமைச்சர் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தத்தை பிரயோகித்து குற்றச்சாட்டுக்களை வலுப்படுத்தி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 10 பேரை சிறையடைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், அரசாங்கத்தின் அமைச்சர்களின் வழக்குகளை பின்தள்ளுவதற்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகளை வலுப்படுத்துவதற்குமாகவே அவர் நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்தாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூட்சி சபை தேர்தலுக்கு முன்னதாக ஒன்றிணைந்த […]

Continue Reading

சின்னையாவை நியமித்து அரசாங்கம் தவறிழைத்துள்ளது – விமல் வீரவன்ச

அமெரிக்க இராணுவத் தலைமையகத்திடமிருந்து சம்பளம் வாங்கிய சின்னையாவை இலங்கை கடற்படையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக நியமித்து தேசியப் பாதுகாப்பை அரசு பலிகொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சின்னையாவின் இனம் குறித்து எமக்குப் பிரச்சினை இல்லை எனவும், போர் முடிவடைந்ததும் அவர் கடற்படையிலிருந்து பதவி விலகிச்சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நான்கு வருடங்கள் பணியாற்றிதாகவும், இக்காலத்தில் அவருக்கு அமெரிக்க […]

Continue Reading