விந்தனுக்கு அமைச்சு பதவி! வெளியானது உத்தியோக பூர்வ கடிதம்!

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்திற்கு அமைச்சு பதவியினை வழக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா கடிதம் மூலம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்றைய தினம் இதனை அறிவித்துள்ளார். கடந்த ஞாயிறுதினம் (16.07.2017) வவுனியாவில் இடம்பெற்ற தமது கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாக இதனை அவர் அறிவித்துள்ளார். தங்கள் தலைமையிலான அமைச்சரவையில், எமது கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த பா. டெனீஸ்வரனை அவரது பதவியில் இருந்து நீக்க வேண்டியுள்ளது. […]

Continue Reading

தீவகப் பாடசாலைகளுக்கு நிதியொதுக்கீடு

வடக்கு மாகாண சபையின் யாழ். மாவட்ட மாகாணசபை உறுப்பினரான கே.என்.விந்தன் கனகரத்தினம் தனக்குரிய 2017ஆம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலைகளின் புனரமைப்பு மற்றும் பாடசாலைகளுக்கான தளபாட கொள்முதல் என்பவற்றிற்காக ரூபா இருபத்து நான்கு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ஒதுக்கியுள்ளார். பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள் தங்கள் பாடசாலைகளுக்கு உதவுமாறு கோரிக்கை முன்வைத்ததை தொடர்ந்து, முன்னுரிமை அடிப்படையில் இந்நிதிகளை ஒதுக்கியுள்ளார். யா/மண்டைதீவு றோ.க.த.க. பாடசாலை, அல்லைப்பிட்டி றோ.க.த.க. […]

Continue Reading