வாக்களிக்கும் வயதெல்லை தொடர்பில் திருத்தம்

18 வயதானவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க தகுதிபெறுவார் என்ற வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது. தற்போதைய சட்டத்தின்படி ஒவ்வொரு ஜூன் மாதமும் தேர்தல் இடாப்பு திருத்தப்படும்போது 18 வயதையடையாதவர்கள் வாக்களிக்க தகுதியை பெறுவதில்லை என்பதுடன், அவர்கள் 19 வயதிலேயே அந்த தகுதியை பெறும் சந்தர்ப்பமே தற்போதுள்ளது. புதிய சட்டத்தின்படி ஜூன் மாதத்துக்கு பின்னர் 18 வயதையடையும் ஒருவர் தேர்தல் ஒன்று நடைபெறும் வரையில் தம்மை வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும் என்ற நிலையில் வருடந்தோறும் […]

Continue Reading

மலையகத்தில் வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் ஆரம்பம்

மலையக பகுதிகளிலுள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் 2017ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பணிகள் எதிர்வரும் ஜுன் 30ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளதால், மலையகத்தின் சகல வாக்காளர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப தலைவர்கள் தமது குடும்ப வாக்காளர்கள் பட்டியலை கிராம சேவையாளர்களிடமிருந்து பெற்று அதனை பூர்த்திசெய்து கிராம சேவையாளர்களிடம் ஜுன் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continue Reading