மலையகத்தில் தொடர்மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக் காலை முதல் அதிக மழை பெய்து வருகின்றமையினால் வாகனங்கள் செலுத்துவதில் சாரதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹட்டன், நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களிலும் ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

இரண்டு நாட்களுக்கு நாட்டில் மழை

நாளை தொடக்கம் இரண்டு நாட்களுக்கு வடக்கு, வடமத்தி, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் மழை வீழ்ச்சியில் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும், இன்று பிற்பகல் தொடக்கம் நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழைபெய்யும் எனவும், வடமத்திய மற்றும் யாழ். மாவட்டத்தில் கூடுதலான மழையினை எதிர்பார்க்க முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஊவா மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் இன்று பிற்பகல் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், மின்னல் மற்றும் காற்றுடனான மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Continue Reading

குடாநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காற்றுடன் மழை!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் மழையுடன், பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஊடாக விஷேடமாக மேல், வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களிலும் ஓரளவு கடும் காற்றினை எதிர்பார்க்க முடியுமென திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ, மத்திய மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும். மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்திலும், யாழ் மாவட்டத்திலும் […]

Continue Reading

காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

நாட்டை ஊடறுத்துச் செல்லும் காற்றின் வேகம் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாமென காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் மன்னார், ஊவா மாகாணம் மற்றும் கேகாலை மற்றும் அவிசாவளை, மாதுருஓய மற்றும் பொத்துவில் முதலான பகுதிகளில் இந்தக் காற்றின் தாக்கம் இருக்கும் என்றும் காலநிலை அவதான நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் காலநிலை அவதான நிலையம் […]

Continue Reading

12 இலட்சம் பேரைப் பாதித்த வரட்சி

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 12 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வரட்சி காலநிலையால் வடமாகாணம் உள்ளிட்ட குருணாகலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள அதேவேளை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வரண்ட காலநிலையால் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading

வடக்கை வாட்டும் கடும் வரட்சி

19 மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள வரட்சி காலநிலையால் 12 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 284 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 49 ஆயிரத்து 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, கிழக்கு மாகாணத்தில் 72 ஆயிரத்து 989 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 63 ஆயிரத்து 527 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading

நீரின்றி முல்லைத்தீவு மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவில் குளங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதனால் விவசாயம், நன்னீர் மீன்பிடி, நிலத்தடி நீர், விலங்குகளுக்கான குடிநீர், உள்ளிட்ட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவின் முக்கிய குளங்களான முத்தையன்கட்டுக் குளம், வவுனிக்குளம் என்பவற்றின் நீர்மட்டம் அடிநிலையினைச் சென்றடைந்துள்ளதன் காரணமாக இக்குளங்களின் கீழான விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இக்குளங்களை நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேலான நன்னீர் மீன்பிடி குடும்பங்கள் வறுமை நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்திலே தொடர்கின்ற வரட்சி காரணமாக பல குளங்களின் நீர் […]

Continue Reading

09 லட்சம் மக்கள் வரட்சியால் பாதிப்பு

13 மாவட்டங்களில் வரட்சியான காலநிலை காணப்படுவதனால் 09 லட்சம் வரையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 07 லட்சம் வரையான விவசாய மக்கள் நீர்ப் பிரச்சினையை எதிர் நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. புத்தளம், மன்னார், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் நிலவும் வரட்சி காலநிலை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Continue Reading

மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று இரவு மழை பொழிய கூடுமென வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, வடக்குக் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் இன்று இரவு இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

நாட்டில் மீண்டும் மழை

எதிர்வரும் 27ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவா, மத்திய, வடமேல் மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் காலி போன்ற மாவட்டங்களில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யுமென்றும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்நிலையில், மழையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தடுத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, […]

Continue Reading

காற்றின் வேகம் அதிகரிப்பு

நாட்டின் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டையில் ஊடாக பொத்துவில் வரையான கடற்கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் எனவும், நாட்டைச் சுற்றிய ஏனைய கடற்கரைப் பிரதேசங்களில், மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், மீனவர்கள் மற்றும் கடற்கரையோர […]

Continue Reading